Header Ads



எமக்கு சவா­லாக இருப்­பது, நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தாகும் - சஜித்

ஜன­வரி  மூன்றாம் திகதி பாரா­ளு­மன்றம் கூடும் போது தனக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­டு­மானால், எதிர்க்­கட்சிக் காரி­யா­லயம் நாட்டு மக்­க­ளுக்கு சேவை செய்யும் காரி­யா­ல­ய­மாக மாறும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­­ம­தாச தெரி­வித்தார். 

தேர்­தலின் பின்னர் எமது கட்சி ஆத­ர­வா­ளர்கள் அதி­க­மானோர் தினந்­தோறும்  பழி­வாங்­க­லுக்கு ஆளாகி வரு­கின்­றனர் என்றும் தெரி­வித்தார்.

நீர்­கொ­ழும்பு தேர்தல் தொகு­தி­யில் ­ஜ­னா­தி­பதி தேர்­தலில் தமக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்கும் கூட்டம்   நீர்­கொ­ழும்பில் இடம்­பெற்­றது. அந்­நி­கழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­வாறு தெரி­வித்தார்

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் நீர்­கொ­ழும்பு அமைப்­பா­ள­ரு­மான  வைத்­தியர் காவிந்த ஜய­வர்­தன தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பீல்ட் மார்சல் சரத் பொன்­சேகா, விஜ­ய­முனி சொய்சா, ஜோன் அம­ர­துங்க, மாந­கர சபை உறுப்­பி­னர்கள் உட்­பட பெரும் எண்­ணிக்­கை­யானோர் பங்­கு­பற்­றினர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­­ம­தாச அங்கு தொடர்ந்தும்  உரை­யாற்­று­கையில்,

எமக்கு சவா­லாக இருப்­பது நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தாகும். இது கடி­ன­மான காரி­ய­மாக இருந்­தாலும்  தேர்தல் பின்­ன­டைவில் பாடங்­களை கற்றுக்கொண்டு எமது குறை­களை சரி­செய்து கொண்டு ஜனா­தி­பதி தேர்­த­லை­விட விட  நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில்  பல மடங்கு கடி­ன­மாக உழைத்து எமது இலக்கை அடை­வ­தாகும். சக­ல­ரையும் இணைத்துக்கொண்டு இந்த வெற்றிப் பய­ணத்தை நோக்கி பயணம் செய்ய எதிர்­பார்த்­துள்ளோம்.

தேர்­தலின் பின்னர் எமது கட்சி ஆத­ர­வா­ளர்கள் அதி­க­மானோர் பழி­வாங்­கல்­க­ளுக்கு ஆளாகி வரு­கின்­றனர். ஜன­வரி  மூன்றாம் திகதி பாரா­ளு­மன்றம் கூடும்போது எனக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­டு­மானால், எதிர்க்­கட்சி காரி­யா­லயம் நாட்டு மக்­க­ளுக்கு சேவை செய்யும் காரி­யா­ல­ய­மாக மாறும். அங்கு அர­சியல்  பழி­வாங்­க­லுக்கு உள்­ளா­ன­வர்­களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் விசேட பிரிவு அமைக்கப்படும். பழிவாங்கல்களுக்கு ஆளானவர்களின் தகவல்கள் பெறப்பட்டு எமது ஆட்சியில் உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.