Header Ads



விமானம் தாழ்வாக பறந்ததே, ஹப்புத்தளை விபத்திற்கு காரணம்

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Y-12 ரக விமான விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, குறித்த விமானம் தாழ்வாகப் பறந்தமையே விபத்துக்குக் காரணமெனவும் தெரிவித்தார்.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Y-12 ரக விமானம், ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளாகியதில், நால்வர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குறித்த விபத்துக்கு விமானம் தாழ்வாகப் பறந்தமையே காரணமெனத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், விபத்து தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய -03- நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பா. நிரோஷ்குமார்

2 comments:

  1. If you know the cause for the accident as flying at low level, then why you need an investigation?

    ReplyDelete
  2. These are the jokers, pre-prepared judgment bearers, the police or the air force authorities still did not assume the investigations yet, but these political jokers come up with the judgment of technical matters for the accident of air force air craft with ill fortunate pilots and airmen, May God protect this country from these jokers.

    ReplyDelete

Powered by Blogger.