Header Ads



முஸ்லிம் சமூகத்தை பாராட்ட வேண்டும், அவர்களைப் பார்த்து பொறாமைபடுவது அர்த்தமில்லை - கருணா

- பாறுக் ஷிஹான் -

அம்பாறை மாவட்டத்தில் பல காலமாக பல அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் செயற்பாடு  இல்லாத நிலையில்தான் அம்பாரை மாவட்டம் காணப்படுகிறது   என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அன்னமலை 2 ல் அமைந்துள்ள வேப்பையடி ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை(1) மாலை 5 மணி முதல் 8 மணிவரை  வைத்தியபொறுப்பதிகாரி திருமதி டாக்டர் சித்தி ஜாயிஷா அனீஸ் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

அம்பாறையில் பல  பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை முஸ்லிம் சமூகத்தை நாம் பாராட்ட வேண்டும் அவர்கள் இருந்த அரசாங்கத்தை நன்றாக பயன்படுத்துவார்கள் அவர்கள் அரசோடு இருந்து கொண்டு வளங்களை பெற்று தங்கள் சமூகத்தை வளர்த்துக் கொண்டார்கள் அவர்களைப் பார்த்து நான் பொறாமை படுவது அர்த்தமில்லை  நம் தலைமைகள் அரசாங்கத்தை பயன்படுத்த தவறிவிட்டோம் அதை செய்வதற்காகத்தான் அம்பாறையில் இறங்கியிருக்கின்றேன்.

அம்பாறை மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்கின்ற வேளை அம்பாறை பிரதேசத்தில் குளத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குடிநீர் செல்கின்றது அந்த குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது நான்தான் என குறிப்பிட்டார்.

3 comments:

  1. இவ்வளவு நாட்களாக பேசிய இனவாதம் எதனால் வந்தது பொறாமையால்தான்.

    ReplyDelete
  2. இது கரனாவா?இருக்க முடியாதே இவ்வளவு காலமும் முஸ்லிம் விரோத துவேசம் தானே பேசியது?

    ReplyDelete
  3. சிறந்த அரசியல்வாதியாகிவிட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.