Header Ads



"முஸ்லிம்கள் தொடர்பில் ஐ.தே.க. வின் இனவாத முகம் அம்பலம்"

கடந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு நன்மை செய்ததாக கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு பொன்சேகா தெரிவித்த கருத்து முஸ்லிம்கள் தொடர்பில் ஐ.தே.க. வின் இனவாத சொரூபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவிக்கையில்

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய பீல்ட் மார்ஷலின் உரையால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தமிழ் -முஸ்லிம் மக்களுடன் கொண்டிருந்த உறவு என்னவென்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவர் எதிர்பார்த்ததைப்போல் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை.எனினும் அவர் தனது முதல் உரையிலேயே தான் நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி என்பதை வலியுறத்தி தெரிவித்தார்.

எனவே அவர் பதவிகள் வழங்கும் போது இனம், மதத்தைப் பார்ப்பதில்லை. தகுதியையும், திறமையையுமே பார்க்கின்றார்.

அவரின் நிலைப்பாடு இப்படியிருக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இவ்வாறு காணப்படுகின்றது. இந்த நிலை தெளிவாக தெரிந்த பின்னரும் தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ஒவ்வொருவருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு; உம் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பாராமுகமாக இல்லை.
    (அல்குர்ஆன் : 6:132)

    ReplyDelete
  2. In this issue both both side have racists and few good people also..

    Let we muslims be good to the all humanity via our action and speech. FURTHER without nlindly favouring personnel political agenda... Let us demand for our equal rights as citizen of slk and our religious identity not harmed by ŕacists
    ... if gurenteed then cast our support to the strong leadership of this country...

    We love peace and we expect peace and justice toward us.

    Allah is our protector but no one else

    ReplyDelete

Powered by Blogger.