Header Ads



பாராளுமன்ற பெரும்பான்மை எம்மிடமே உள்ளது, ஜனாதிபதியின் உரையை சவாலுக்குட்படுத்துவது முறையல்ல

பாராளுமன்றத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரையை சவாலுக்கு உட்படுத்துவது முறையல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார். 

பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் போன்ற தேசிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு - 3 , 5ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இலத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே அரசாங்கத்தை ஜனாதிபதி கோதாபயவிடம் வழங்கியுள்ளோம். பாராளுமன்றத்தின் பெரும்பானமை எம்மிடமே உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது தொடர் அடக்குமுறைகளும் பழிவாங்கல்களும் பிரயோகிக்கப்படுமேயானால் ஜனாதிபதியின் இன்றைய தின கொள்கை பிரகடண உரையை சவாலுக்கு உட்படுத்தி வாக்கெடுப்பில் தோல்வியடைய செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவதுவல குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் அவ்வாறு ஜனாதிபதியின் உரையை சவாலுக்கு உற்படுத்துவது முறையல்ல என்றும் கூறினார்.

1 comment:

Powered by Blogger.