Header Ads



நாங்கள் வெள்ளை மாளிகையைத் தாக்க முடியும் - ஈரான் அரசியல்வாதிகள் கொந்தளிப்பு


ஈரானில் ஞாயிற்றுக்கிழமையன்று -05- நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், 'அமெரிக்காவிற்கு மரணம்' என உறுப்பினர்கள் சில நிமிடங்களுக்கு கூச்சலிட்டுள்ளனர்.

தலைநகர் டெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் இரானிய உறுப்பினர்கள் 'அமெரிக்காவிற்கு மரணம்' என ஒன்றாக சேர்ந்துகொண்டு சில நிமிடங்களுக்கு கோஷமிட்டுள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகளை ஈராக்கில் இருந்து வெளியேற்றுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

அப்போது பேசிய பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி, குவாசிம் சுலைமானி கொலையை 1953 ஆம் ஆண்டு CIA ஆதரவுடைய சதித்திட்டத்துடன் ஒப்பிட்டார்.

மேலும், அமெரிக்க அதிகாரிகளை 'காட்டின் சட்டத்தை' பின்பற்றுபவர்கள் என்றும், "மிஸ்டர் டிரம்ப், இது தான் இரானின் குரல் , கேட்டுக்கொள் '' என்றும் முழக்கமிட்டார்.

இதனைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அபோல்பஸ்ல் அபுடோராபி, ஈரானின் இராணுவம் "அமெரிக்க மண்ணை" தாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று எச்சரித்தார்.

தெஹ்ரான் தனது அணுசக்தி எதிர்ப்பு உறுதிப்பாட்டை திரும்பப் பெறுவதாக அச்சுறுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கு வெளியாகியுள்ளது.

மேலும் அவர் பேசுகையில், "நாங்கள் வெள்ளை மாளிகையைத் தாக்க முடியும். அமெரிக்க மண்ணில் அவர்களுக்கு பதிலளிக்க முடியும். எங்களுக்கு அதிகாரம் உள்ளது, மேலும் கடவுள் விரும்பினால் நாம் பொருத்தமான நேரத்தில் பதிலளிப்போம்.

"இது ஒரு போர் அறிவிப்பு, இதற்கு நீங்கள் தயங்கினால் இழப்பு நேரிடும். "யாராவது போரை அறிவிக்கும்போது தோட்டாக்களுக்கு பூக்களால் பதிலளிக்க விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பிய அவர், அமெரிக்கர்கள் உங்களை தலையில் சுட்டுவிடுவார்கள்." என்று பேசினார்.

மூன்றாவது உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ஈரானிய அரசியல்வாதிகள் "வெள்ளை மாளிகையைத் தாக்குவதாக" உறுதியளித்துள்ளனர்.

அதேசமயம் ஈராக்கில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், பல சட்டமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி வாக்களிக்க முன்வந்தனர்.

1 comment:

  1. If war started between USA and Iran ,will Russia help Itan? If it will happen there will be possibilities for 3rd world war that will cause the mass destruction to this world

    ReplyDelete

Powered by Blogger.