Header Ads



இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தொலைபேசி வாடிக்கையாளரால் கோரப்படாத அனைத்து விளம்பர குறுஞ்செய்திகளிலிருந்து விலகுவதற்கான வசதியைச் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேவையற்ற குறுஞ்செய்திகள் பெறுவதை நிறுத்துவதற்கான உரிமையை நுகர்வோருக்கு வழங்குவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது

அவ்வாறான குறுஞ்செய்திகளிலிருந்து விலகுவதற்கான வசதியை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் குறுஞ்செய்தி ஊடாக தங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதனை தவிர்த்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.