Header Ads



ஐதேக பிரச்சினைக்கு தீர்வுகாண தொடர் பேச்சு - பங்காளி கட்சித் தலைவர்கள் மும்முரம்


ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள உள் முரண்­பாட்டு நிலைக்கு  தீர்வு காண்­ப­தற்கு தொடர் பேச்­சு­வார்த்­தை­களில்  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்சி தலை­வர்கள் மும்­மு­ர­மாக ஈட்­டு­பட்டு வரு­கின்­றனர்.

ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாச ஆகி­யோரை சந்­தித்து இவர்கள் நேற்று விரி­வான பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர்.

இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசிய முன்­னி­ணியின் பங்­கா­ளிக்­கட்சித் தலை­வர்­க­ளான மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரும் ஐ.தே.க.எம்.பி.க்களான ரவி­க­ரு­ணா­நா­யக்க தலதா அத்­து­கொ­றல ரஞ்சித் மத்­தும பண்­டார உட்­பட வேறு­சி­லரும் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது கட்­சியின் தலை­மைப்­ப­தவி தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன் பொதுத் தேர்­தலை எவ்­வாறு சந்­திப்­பது என்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

கட்சி தலை­மைப்­ப­த­வியை துறந்து சிரேஷ்ட தலை­வ­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நிய­மிப்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக கரு­ஜெ­ய­சூ­ரி­யவை நிய­மிப்­பது  குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

கட்­சியின் தலை­மைப்­ப­த­வியை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வழங்கி பொதுத் தேர்­தலில் பிர­தமர் வேட்பாளராக கருஜயசூரியவை களமிறக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினமும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாக இன்றைய பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் கருஜயசூரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

2 comments:

  1. You guys keep talking and talking until Mahinda and company gets two third majority.

    ReplyDelete
  2. RANIL AND SAJITH BOTH THINGS ABOUT THEIR EGO AND POLITICAL FUTURE AND NOT THAT OF UNP OR MUSLIM AND TAMIL PARTIES WHO SUPPORTED THEM.VERY SAD SITUATION FOR MANO GANESAN-HAKEEM-RISHARD.THE TNA MAY HAVE BEEN NOT IN THEIR GROUP BUT THEY ALSO SUPPORTED RANIL.TO DAY SAMPANTHAN-SUMANTHIRAN BOTH ARE MADE POLITICAL BEGERS BY RANIL AND LEFT ON MIDILLE OF THE ROAD.TNA-HAKEEM-RISHARD MAY BE ABLE TO WIN REASONABLE NUMBER OF SEATS.BUT MANO GANESAN WILL NEVER WIN IN COLOMBO IF HE CONTEST ALONE WITH OUT THE SUPPORT OF UNP.

    ReplyDelete

Powered by Blogger.