Header Ads



டுபாய் மீதும், இஸ்ரேல் மீதும் குண்டு வீசுவோம் - ஈரானிய குத்ஸ் படை எச்சரிக்கை

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க பதிலடி தர முயன்றால் இரண்டு முக்கிய நாடுகள் மீது குண்டு வீசுவோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய குத்ஸ் படைகளின் தலைவர் குவாசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே வேளை, ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் சுமார் 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் தொடுத்தது.

குறித்த தாக்குதலுக்கு பதிலடி தர முயன்றால் ஐக்கிய அமீரகத்தின் செல்வாக்கு மிகுந்த மாகாணமான துபாய் மற்றும் இஸ்ரேல் மீது குண்டு வீசப்படும் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் செய்தி ஊடகமான IRNA செய்தி முகமை வாயிலாகவே குத்ஸ் படைகள் விடுத்துள்ள எச்சரிக்கையில்,

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் தொடக்க புள்ளியாக இருக்கும் எந்தவொரு பிரதேசமும் குறிவைக்கப்படும்,

மட்டுமின்றி அமெரிக்கா என்ற பயங்கரவாத இராணுவத்திற்கு தங்கள் தளங்களை வழங்கிய அனைத்து அமெரிக்க நட்பு நாடுகளையும் நாங்கள் எச்சரிக்கிறோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஏவுகணை தாக்குதலுக்கு இரையான ஈராக்கின் அல் ஆசாத் இராணுவ தளமானது கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விஜயம் செய்த பகுதியாகும்.

No comments

Powered by Blogger.