Header Ads



சகல மதரசாக்களையும் பதிவு, செய்யுமாறு பிரதமர் உத்தரவு

இலங்கையில் உள்ள சகல மதரசாக்களையும் முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வது அவசியமென, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மதரசாக்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து, சரியான முறையைக் கையாளுமாறும் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும்  மதரசாக்களில் கற்பிக்க வேண்டிய பாடத்திட்டங்கள் குறித்து, கல்வி அமைச்சும் முஸ்லிம் விவகார அமைச்சும் இணைந்து சரியான பாடத்திட்டத்தை பரிந்துரைக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

5 comments:

  1. VERY GOOD MOVE, HON PRIMINISTER

    ReplyDelete
  2. மதரஸாக்களில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் ஏன் கற்பிக்கப்படுகின்றன. அதன் இறுதி இலக்கு என்ன? அந்த பாடநெறிமூலம் அவர்களின் உலக வாழ்க்கையிலும் மறுமை வாழ்க்ைகக்கும் எவ்வாறு உச்சப் பயனைப் பெற்றுக் கொள்ளலாம்? என்பது பற்றி இலங்கையில் எந்த ஒரு மதரஸாவிலும் ஒரு கலந்துரையாடல் அல்லது கருத்துப்பரிமாறல் போன்றவைகளோ நடைபெற்றில்லை என்பதை நாம் ஆணித்தரமாகக் கூறலாம். யாரோ பணவசதியுள்ள ஒரு தனிநபர் அல்லது வியாபார நோக்கமாக சமூகத்தில் உள்ள பணக்காரர்களிடம் பணம் வசூலித்து சொகுசாக வாழத்திட்டமிட்ட ஒரு பள்ளி முஅத்தின் அல்லது அரைகுறையாக ஓ(டி)ய ஒருவர் செய்த முயற்சிகள்தான் இந்த மதரஸாக்கள். மிகவும் ஆரம்பகாலத்தில் பணக்கார முஸ்லிம்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் திருப்தியை நாடி இந்த தியாகத்தைச் செய்திருக்கலாம். ஆனால் தற்காலத்தில் நடைபெறும் எந்த ஒரு மதரஸாவும் அத்தகைய தூய எண்ணமும் சரியானஇலக்குடனும் நடைபெறுவதாக நிச்சியம் இல்லை என்பதுதான் உண்மை. எனவே மதரஸாக்களைப் பலிகடவாக பாவித்த இந்த ஸஹ்ரான் போன்ற சைத்தான்களின் வேலை, மார்க்க போதகர் என்ற போர்வையில் வௌிநாட்டுப்பணத்துடன் மார்க்க போதனை செய்த இப்ராஹீம் போன்றவர்களின் எருமைச் சிந்தனையால் இன்று இதன்பிறகும் இந்த முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளை எதிர்நோக்கியிருக்கின்றது. அதன் விளைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வரும். முஸ்லிம் தனியார் சட்டத்தை வைத்துக் கொண்டு இரண்டு "அறிஞர்" குழுக்கள் செய்த சண்டையின் விளைவு மற்றொரு காபிரை வலுவடையச் செய்து இந்த நாட்டு முஸ்லிம்களையே பலிகடாவாக்கியுள்ளது.

    ReplyDelete
  3. நற்சிறந்த உத்தரவு.

    ReplyDelete

Powered by Blogger.