Header Ads



ரஞ்சனுடன் உரையாடிய ஆளும்தரப்பு, உறுப்பினர்களின் குரல் பதிவுகள் எங்கே..? ஹரீன் கேள்வி

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை அரசாங்கம் பொதுத்தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றது. இவருடன் தொலைபேசியில் ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர்களும் உரையாடியுள்ளார்கள்.  அந்த குரல் பதிவுகளை  அரசாங்கம் இதுவரையில் வெளியிடாமையின் பின்னணி என்ன  என்று பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீன் பெர்னான்டோ கேள்வியெழுப்பினார்

வெலிகட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று -16- வியாழக்கிழமை சிறைச்சாலையில் சந்தித்த  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பில்  உள்ள  முக்கிய தரப்பினரும் ரஞ்சனுடன்  பல விடயங்கள் குறித்து தொலைபேசியில் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளார்கள். அவர்களின் உரையாடலும்  ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை இதுவரையில் அரசாங்கம்  வெளியிடாமையின் பின்னணி  என்ன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ   சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முனைந்தாலும் அவரை சூழ்ந்துள்ளோர் அதற்கு ஒருபோதும்  இடமளிக்க மாட்டார்கள்.

சிறந்த அரசியல்  கலாச்சாரத்தை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சியமைத்தவர்கள் இன்று  மறைமுகமாக  வெறுக்கத்தக்க  விடயங்களை மாத்திரம் பொதுத்தேர்தலை இலக்காகக்  கொண்டு முன்னெடுக்கின்றார்கள்.

நாட்டு மக்களுக்கு  வழங்கிய வாக்குறுதிகள் இன்று  நிறைவேற்றப்படவில்லை . மாறாக  தீவிர  அரசியல் பழிவாங்கல் மாத்திரமே இடம் பெறுகின்றன என்றார்.

No comments

Powered by Blogger.