Header Ads



பணப் பயன்பாட்டை குறைத்து அட்டைகள் அல்லது வேறு முறைகளை பயன்படுத்த மத்தியவங்கி திட்டம்

இலங்கை மத்திய வங்கி 2020 ஆம் ஆண்டை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது. 

பணத்தின் மூலம் இடம்பெறும் வங்கி செயற்பாடுகளை குறைத்து டிஜிட்டல் முறையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு மக்களை தயார்படுத்தல் இதன் நோக்கமாகும். 

இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று (29) இடம்பெற்றது. 

இங்கு கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் கொடுக்கல் மற்றும் தீர்வுதுறை திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ம ஸ்ரீ குமாரதுங்க, இந்த டிஜிட்டல் முறையின் மூலம் வாடிக்கையாளர்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்தே நீர் கட்டணம், மின்சார கட்டணம் மற்றும் காப்புறுதி கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த முடியும் என கூறினார். 

அதேபோல் 23 மில்லியனுக்கும் அதிகமான வங்கி அட்டைகள் வெளியிடபட்டுள்ளதாகவும் எனவே இயலுமானவரை அவற்றை பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களை கேட்டுள்ளார். 

மேலும் மத்திய வங்கியால் 2018 ஆம் ஆண்டு QR என்ற குறியீட்டு இலக்கத்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும் இதற்கிணங்க வங்கிகளால் அறவிடப்படும் தரவு பணத்தை 0.5 வீதமாக குறைக்குமாறு தெரியபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். 

அதேபோல் பணப் பயன்பாட்டை முடிந்தளவு குறைத்து அட்டைகள் அல்லது வேறு முறைகளை பயன்படுத்த மக்களை தூண்டுவது இதன் பிரதான நோக்கம் எனவும் மத்திய வங்கியின் கொடுக்கல் மற்றும் தீர்வுதுறை திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ம ஸ்ரீ குமாரதுங்க மேலும் கூறினார். 

1 comment:

Powered by Blogger.