Header Ads



84 பில்லியன் ரூபா கடன் இருக்க, கடனைச்செலுத்த கடன் கேட்கும் மின்சார சபை

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவேண்டிய, கடன் தொகையை மீள செலுத்துவதற்காக மேலும் கடன் பெறுவற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அரச வங்கிகளூடாக கடனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

84 பில்லியன் ரூபா கடன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.

கடன் தொகையை செலுத்தத் தவறினால், எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்தல் விடுத்திருந்தது.

1 comment:

  1. கடனைப் பெற்று கடனை மீளச் செலுத்துவது என்பது இலங்கைக்கு ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.இலங்கையின் படுகடன்களின் வட்டியைச் செலுத்த பில்லியன் கணக்கான தொகைப்பணத்தை வேறு நாடுகளிலிருந்து கடனாகப் பெறுவது இலங்கையின் பொருளாதார கோட்பாடாகும்.எனவே, இது பற்றி உலக நாடுகள் அல்லது இலங்கையில் யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு சிறந்த உதாரணம், மைத்திரி சனாதிபதி மலேசியா சென்றபோது மலேசியாவின் பொருளாதாரத்தை மிகச் சிறந்த நிலைக்குக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்த பிரதமர் மகாதிர் முஹம்மத் அவர்களிடம் 'இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது எப்படி என மலேசியப் பிரதமரிடம் ஆலோசனை கேட்ட போது, அவருடைய பதில்' நீங்கள் பட்ட கடனைச் செலுத்த மற்றொரு கடன் வாங்கும் நாடு உங்களுடைய பொருளாதாரம் எவ்வாறு முன்னேறும்? எனக் கேள்வி கேட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.