Header Ads



குவாசிம் இறுதி, ஊர்வலத்தில் 7 மில்லியன் பேர்


ஈரான் நாட்டின் புரட்சிகர தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் 7 மில்லியன் பேர் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஈரானின் புரட்சிகர தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதால், ஈரான் அந்நாட்டின் மீது கடும் கோபத்தில் உள்ளது.

குவாசிம் சுலைமானியின் மரணம் காரணமாக கடந்த 3-ஆம் திகதி முதல் 6-ஆம் திகதி வரை துக்க நாள் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்று நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் குவாசிம் சுலைமானின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வர், நாட்டின் மிகப் பெரிய இறுதி ஊர்வலமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் 7 மில்லியன் மக்கள் கலந்து கொண்டதாக இஸ்லாமியா ஒருங்கிணைப்பு கவுன்சில் Nosratollah Lotfi தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஊவர்லத்தின் போது ஏராளமான மக்கள் டிரம்பின் புகைப்படத்தை எரிப்பது போன்றும், அவரை தூக்கில் தொங்க வைப்பது போன்றும், அமெரிக்காவிற்கு மரணம் என்று முழக்கமிட்டனர். இதில் ஒரு சிலர் அவரின் உடல் கொண்டு வரப்பட்ட சவப்பட்டியை தொட்டு கதறி அழுதனர்.

அந்த புகைப்படங்கள் எல்லாம் சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

No comments

Powered by Blogger.