Header Ads



ரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை

- Anzir -

முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை,  நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய முன்வந்துள்ளதாக சமூக ஆர்வலரும், சட்டத்தணியுமான சிஹார் ஹசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் தனியார் சட்டம் என்பது 500 வருடங்கள் பழமை வாய்ந்தது. அதற்காக எமது மதிப்புக்குரிய பெரியவர்கள் இரத்தம் சிந்தாது போராடியே இந்த உரிமையை எமக்கு பெற்றுத் தந்தனர்.

எமக்கு கிடைத்த இந்த உரிமையை நாம் எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது. ரதன தேரர் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு தமது பௌத்த வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சிக்கிறார்.

இங்கு அபாயம் என்னவென்றால், பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க முடியுமென்பதாகும்.  இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை.

எனவே நாம் மிகவும் விழிப்புடன் செயற்படுவது அவசியமாகும். இதனை சட்டரீதியாக நீதிமன்றத் துணையுடன் எதிர்கொள்வே சாலச்சிறந்தது.

மிகவும் புகழ்பெற்ற மாற்றுமத சட்டத்திரணிகளும், எமது சமூகத்தில் உள்ள மூத்த சட்டத்தரணிகளும் இதன்பொருட்டு நீதிமன்றில முன்னிலையாக தயாராகவுள்ளனர்.

முஸ்லிம் பெண்களை முஸ்லிம் சட்டத்திலிருந்து பாதுகாக்கவே தாம் இந்தச்சட்டத்தை இல்லாதொழிக்க முயலுவதாக ரதன தேரர் கூறியுள்ளதால் ரதன  தேரரின் எந்த திட்டத்திலும் முஸ்லிம் பெண்கள் எவரும் சிக்கிவிடக்கூடாது.

இலங்கை அரசியலமைப்பில்  பாராளுமன்றமே மீயுயர் பீடமாகும். சட்டமியற்றும் அதிகாரத்தை பாராளுமன்றமே கொண்டுள்ளது. பாராளுமன்றம் முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க வாக்களித்தால் எமக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பிரேரணை மீதான வாக்களிப்பை தடுக்கலாம். அதற்காகவே நீதிமன்றத்தை நாடவேண்டியுள்ளது.

இந்திய குடியுரிமை விவகாரத்தில் எல்லாம் நடந்து முடிந்த பின்னர்தான் அங்கு சிறுபான்மை முஸ்லிம் சமூகம் விழித்துக்கொண்டது. அதுபோன்ற நிலை இலங்கையில் வரக்கூடாது. எனவே முஸ்லிம்களாகிய நாம் எப்போதும் விழித்தவர்களாக இருப்போம் என்றார்.

3 comments:

  1. I think Mr Ali Sabry should look into this matter urgently and discuss it with the president.

    ReplyDelete
  2. This is a well organized and promptly arranged program which has a wide range of links and connections.We have to work quickly to face the challenges and perhaps our delay in the pursuit of legal action would definitely affect the Muslim community.

    ReplyDelete
  3. MUSLIMGALEY ! MUSLIMGALAI KILARIVITTU ARASHIYAL LAAPAM THEDUM,
    IVANAIPATRI KAVANAMAAKA
    IRUNGAL.ANRU HAKEEM UTPADA
    FOUZIYIN THALAMAIYIN KEEL
    INDA MUSLIM SHATTAM,
    MAATRAPADAVENDUM ENRU
    NEETHI AMAICHAR THALATHAVUKKU,
    PIRERANAI KAIYALITHAPOLUTHU,
    IVAN THOONGIKONDA IRUNDAAN ?

    ReplyDelete

Powered by Blogger.