Header Ads



முஸ்லிம் சமூகம் கவனம், செலுத்தவேண்டிய 4 முக்கிய விடயங்கள் - அலி சப்ரி

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி Dr. நயீம் உடைய புத்தக வெளியீட்டு நிகழ்வில் 08.01.2020 பேசிய கருத்துக்கள் மிகப் பெறுமதியானவை.   சில குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

1875 இல் இலங்கையில், முழு நாட்டிலும் இரண்டே இரண்டு முஸ்லிம் ஆசிரியர்கள் மாத்திரமே இருந்துள்ளனர்.

1878 இல் எந்தவொரு பரீட்சைகளிலும், புலமைப்பரிசிலுக்கான தேர்வுப் பட்டியலிலும் எந்தவொரு முஸ்லிமினதும் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

1879 இல் முழு நாட்டிலும் மொத்தமாக 1232 மாணவர்கள் மாத்திரமே இருந்தனர். இது மொத்த மாணவர் தொகையில் வெறுமனே 2.2% ஆகும்.

1880 இல் முஸ்லிம் ஆண்களின் எழுத்தறிவு வீதம் 32% இருந்த நிலையில் 2% ஆன பெண்களுக்கு மாத்திரமே எழுத வாசிக்கத் தெரிந்திருந்தது.

1900 இல் மொத்தமாக மூன்றே மூன்று முஸ்லிம் பாடசாலைகள் மாத்திரமே இருந்தது.

அறிஞர் சித்திலெப்பை ஸாஹிரா கல்லூரியை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது அப்போதிருந்த முன்னணி உலமாக்கள் "ஆங்கிலத்தில் படிக்காதீர்கள்; அது உங்களை கத்தோலிக்கர்களாக மாற்றிவிடும். முஸ்லிம் பெண்களை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்; அவர்கள் மாற்று மதத்தினரை திருமணம் செய்து விடுவார்கள்." என்று அவரிடம் முறைப்பட்டார்கள்.

ஆனால் அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி இன்று முஸ்லிம்களின் பல்கலைக்கழக நுழைவில் கிட்டத்தட்ட 65% இனை பெண்கள் எட்டியிருக்கிறார்கள்.

இந்த நிலையை அடைவதற்கு முஸ்லிம் சமூகம் மிகப் பெரும் சவால்களையும் கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

நாம் இன்று கல்வியில் முன்னேறியிருப்பதற்கு சித்திலெப்பை, டீ.பி.ஜாயா, Dr.பதியுத்தின் மஹ்மூத் போன்ற முற்போக்கான தலைவர்களின் தூர நோக்கும், முயற்சிகளும்தான் வழிகோலின என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்த வேண்டிய நான்கு முக்கிய விடயங்கள் தொடர்பான சுருக்கமான விளக்கமாக அவரது உரை அமைந்திருந்தது.

1. Contextualized Living - நாம் வாழுகின்ற சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இஸ்லாமிய வாழ்வை ஒழுங்கு படுத்துதல்.

2. Gain Knowledge - அறிவைப் பெறுவதும் அதனைப் பிரயோகித்தலும்

3. Tolerance - சகிப்புத்தன்மை

4. Moderation - இரண்டு தீவிர நிலைகளிலுருந்தும் விலகிய நடுநிலையான இஸ்லாமிய சிந்தனை.

Ramees Abdul Salam

7 comments:

  1. இலங்கை முஸ்லீங்கள் தங்களின் வழிகாட்டலில் ஒன்று சேர இறையருள் பெறவேண்டும். அன்று ஆங்கில மொழி எதிர்ப்பு சிந்தனைபோன்றே இன்று விவாக விவாகரத்து விடயத்திலும் உலமாக்கள் நடந்து கொண்டார்கள். தூரநோக்கற்ற உலமாக்கள் இன்றும் இருப்பதால்தான் வேறு ஒருமதத்தவர் இந்த விடயத்தில் எமக்குத் தீர்வு பெற்றுத்தரப்போவதாக வௌிக்கிளம்பியுள்ளார்.

    ReplyDelete
  2. 1900 aanduhalil ulamakkal sonnadu appodaya kaala kattatil unmayanadu. Sudandiratuku pirahu nilamaihal maara muslimgal tozhil kalviyil kavanam eduka todanginar. Masha ALLAH. Innum nandraha muyatchika vendum nalla Muslim pirajayaha maara vendum

    ReplyDelete
  3. Ok sir .Pleasw go and jpin with ACJU AND WORK TOGETHER.
    YOU HAVE GOOD OPINION MASHA ALLAH.
    PLS TRY TO IMPLEMENT ONTHIS WITH ACJU MUSLIM COUNCIL SHOORA COUNCIL AND OTHER GROUPS ARE GATHRING.BE UNITY ALLAH WILL HELP OUR UMMAH

    ReplyDelete
  4. No. 5. Not to be selfishness and opportunistic
    No. 6. Giving up being hypocrite and aggressive with own community while being honest and politeness with other communities.

    ReplyDelete
  5. The question is WHY? The Sri Lanka Muslim Community and its POLITICIANS should stand before a “MIRROR” and ask the question WHY? Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).
    1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.
    2. We are (especially) the POLITICIANS) are NOT UNITED.
    3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.
    4. Our dealings are NOT CLEAN with other Communities.
    5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.
    6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.
    7. We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.
    8. WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.
    9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.
    10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
    THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - The Muslim Voice.
    (Note: These comments are NOT made as MALICE against any politician or political party. It is written to kindle the aspirations and inspiration of the Muslims of Sri Lanka, Insha Allah).

    ReplyDelete
  6. Mr Ali Sabri may have missed two points here .
    No:5 Muslims must vote for Rajapakshas.
    No:6 Muslims must stop voting U N P or Muslim parties.
    Mr Ali Sabri , there are few selfish Muslims who will
    do anything to sell out the community . And can you
    advise the poor community how to achieve your 4 point
    goals to be better Muslims . And do you honestly believe
    if they follow your advise they will be safe from all
    dangers unleashed against them ?

    ReplyDelete

Powered by Blogger.