Header Ads



14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திய, அரசியல்வாதிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

14 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அக்குரெஸ்ஸ முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாருவ லியனகே சுனிலுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 15 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்கு மேலதிகமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை பிரதிவாதியால் செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டஈட்டினை செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார். 

மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது ​கடுமையானது எனவும், இதன் ஊடாக பொதுமக்கள் ஜனநாயகம் மீது நம்பிக்கை இழக்கக்கூடும் எனவும் தீர்ப்பினை அறிவித்து நீதிபதி குறிப்பிட்டார். 

2012 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி மற்றும் அதே வருடம் ஜூன் மாதம் இரண்டாம் திகதி வரையான காலப்பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த நீதிபதி, பிரதிவாதி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுவதாக குறிப்ப்பிட்டார். 

தீர்ப்பினை வழங்குவதற்கு முன்னர் பிரதிவாதியின் சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி இந்த தீர்ப்பினை அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.