Header Ads



சம்பிக்கவின் கைது பற்றிய, விமர்சனங்களுக்கு மகிந்தவின் பதிலடி

சட்டம் அனைவருக்கும் சமமான முறையில் அமல்படுப்படும் என்பதில் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வாத்துவ பகுதியில் இன்று -22- இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவர் ஒருவர் நாட்டில் கைது செய்யப்பட்டாலும், அது தொடர்பில் தங்கள் மீதே விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் அவர்கள் எதற்காக கைது செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை.

தனிநபர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது, விபத்தினை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களை புரிவது அரசியல் பழிவாங்கல்கள் அல்ல.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது அவ்வாறான செயற்பாடுகள் காணப்பட்டது.

எனினும் தற்போது அந்த நிலை இல்லை.

குற்றம் இழைத்தவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. If everyone is treated equally under the law, expedite the cases such as Thajudeen murder, Lasantha’s murder etc. etc.
    Cancel the Presidential pardon to Gnanasara.
    Many more.

    ReplyDelete

Powered by Blogger.