Header Ads



வடக்கின் ஆளுநராக ஜனாதிபதி முன், பதவிப்பிரமாணம் செய்தார் சாள்ஸ்


வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று(30) பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

முன்னதாக, வட மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த 18 மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தின்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வட மாகாண ஆளுநராக பதவி ஏற்கவுள்ளதாக கூறப்பட்டது.

எனினும், எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தலேயே இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என, தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன, கடந்த 23ஆம் திகதி  காலை கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே, வட மாகாண ஆளுநராக, திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

4 comments:

  1. நல்வாழ்த்துக்களும் வரவேற்பும் சகோதரி. உங்களைப்போன்ற தேர்ந்த நிர்வாகிக்காக வடமாகாண சபை நெடுநாட்களாக காத்திருக்கு. தமிழ் முஸ்லிம் அகதிகள் பிரச்சினை, போரில் சிதைந்த சுற்றுபுற சூழல் புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்க முயலும் சாதி, பள்ளங்களில் வசிக்கும் ஒடுக்கபட்டமக்களின் காணி மற்றும் சமூகநல அபிவிருத்தி பிரச்சினை மன்னாரில் திருக்கேதீஸ்வரம் மத சிக்கல் இவை எல்லாம் தீர்வுக்காக உங்களை காத்திருக்கு. வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. சுமந்திரன் இனி இப்படிச் சொல்வார். "எங்களுடைய நல்லாட்சி காலத்தில் இவர் உயர் பதவியில் இருந்தது உண்மைதான். அப்போது அவர் திறமையாகச் செயற்பட்டார். இப்போது, அவரிடம் எந்தத் திறமையும் இல்லை" என்றுதான்.
    சந்தர்ப்பவாத அரசியலை இனிமேல் ரீ.என்.ஏ. நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. சந்தர்ப்பவாத, துவேஷ அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த மிகப்பொிய சாட்டையடி!
    ஜனாதிபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete

Powered by Blogger.