Header Ads



சஜித்திற்காக வஞ்சக எண்ணத்தில் நாம் பிரார்த்தனை செய்யவில்லை - உதய கம்மன்பில

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைய காரணமான நபர்களை தொடர்ந்தும் அநத கட்சிக்குள் வைத்திருந்தார், எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அதே தோல்வி ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று -07- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

சஜித் நீண்டகாலம் பெரிய போராட்டத்தை நடத்தியே இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனால், குறுகிய காலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்க அதிஷ்டம் கிடைக்கட்டும் என நாங்கள் பிரார்த்திக்கின்றோம். வஞ்சக எண்ணத்தில் இந்த பிரார்த்தனையை செய்யவில்லை. மிகவும் நேர்மையான எண்ணத்தில் செய்கின்றோம்.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியை ரணிலிடம் இருந்து பறித்து சஜித்திடம் வழங்க வேண்டும் என அந்த கட்சியின் இரண்டாம் வரிசை அணியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

சஜித்தை தலைவராக நியமித்தால் நாட்டு மக்கள் வாக்களிப்பார்களா?. பெரிய போராட்டத்தை நடத்தி சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்தினார்கள். ரணில் தோற்றதை விட மிக மோசமாக சஜித் தோற்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது சிங்கள எதிர்ப்பு, மேற்குலக சார்பு கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால், பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள் சுற்றி இருந்தால், இதுவரை ரணில் விக்ரமசிங்க தலைமையின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த முடிவுகளே சஜித் பிரேமதாசவின் தலைமையிலும் கிடைக்கும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.