Header Ads



சுவரோவியம் வரைவதில், ஓட்டமாவடியில் நல்ல முன்மாதிரி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் வேலைத்திட்டம் நாடுபூராவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில்ஓட்டமாவடி பகுதியில் வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் வேலைத்திட்டம் இன்று (20) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று ஓட்டமாவடி தேசிய பாடசாலை சுவரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டத்தில் சட்டத்தரணியும் பதில் நீதிபதியுமான ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாஹ் மற்றும் பிரதேச ஓவியர்கள், ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

குறித்த சுவர் ஓவியத்தில் இன நல்லுறவு, போதை ஒழிப்பு, கல்குடாவின் பாரம்பரிய கலாச்சாரம், பிரதேச பிரசித்திபெற்ற இடங்கள், இலங்கை பொலிஸ் சேவையில் முதலாவது உயிர்நீத்த பொலிஸ் அதிகாரியின் வரலாறு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகள் வரையப்பட்டவுள்ளாதாக பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)


1 comment:

Powered by Blogger.