Header Ads



நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு, எதிராக சம்பிக்க கைது - பிரதி சபாநாயகர்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளார் என பிரதி சபாநாயகர் ஆனந்தகுமார ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் எ அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய முன்னரே எழுத்து மூலம் தகவல் கொடுக்க வேண்டும். ஆனால் சம்பிக்கவை கைது செய்யும் போது அவ்வாறு எந்தவிதமான அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை.

கைது செய்வதற்குச் சென்றவர்கள் தொலைபேசி மூலமாக தகவல்கள் வழங்கியதாக குறிப்பிட்ட பிரதி சபாநாயகர் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சபாநாயகர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் பிரதி சபாநாயகர் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்.

    ReplyDelete
  2. இவரின் கைதை பற்றி முஸ்லிம்கள் தங்களின் பிழையான கருத்துகளை தவிர்க்க வேண்டும் ஏனனில் நாங்கள் நல்ல இஸ்லாமியரின் பணிவன்புடன் அவர் மீது செலுத்தும் போது அவரே முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை செய்ததை எண்ணி கவலைப்படுவார்.

    ReplyDelete
  3. சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய இடத்தில, சொல்ல வேண்டிய நேரத்தில், அதை சொல்ல வேண்டிய நபரிடம் சொல்லிவிட வேண்டும். அதை விடுத்து, அன்பு, பண்பு, கருணை எல்லாம் இவனைப்போல் உள்ள இனவாதிகளிடம் காட்டி நாம் நம்மை கேவலப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.