Header Ads



சிலாபம் வைத்தியசாலையில் தாயும், மகளும் மரணம் - விசேட விசாரணை ஆரம்பம்

சிலாபம் வைத்தியசாலையில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனமடுவ - பல்லம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி அவரது குழந்தை உயிரிழந்துள்ளது.

கடந்த 28ஆம் திகதி காலை நெஞ்சு எரிச்சல் மற்றும் தலைச்சுற்று ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரையில் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், குழந்தை பிறக்க சில நாட்கள் இருந்த போதிலும் குழந்தை பிறக்க அவசியமான பொருட்களை கொண்டு சென்றுள்ளார்.

சிலாபம் வைத்தியசாலையில் சோதனையிட்ட அதிகாரிகள் அவருக்கு கேஸ்டிக்ஸ் நோய் உள்ளதாக கூறி அதற்கு சிகிச்சையளித்து விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு வந்த அவருக்கு மீண்டும் அதே பிரச்சினை காணப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் பல்லம பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது இரத்தத்தில் அழுத்தம் அதிகரித்துள்ளமையினால் அவரை உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு சிசேரியன் மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிறந்து சில நிமிடங்களில் குழந்தை உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பின்னர் தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அடுத்த நாள் சிலாபம் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அங்கு 4 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் தாய் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் குடும்ப உறுப்பினர் வைத்தியர்களின் கவனக்குறைவே இந்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.