Header Ads



ஐக்கிய தேசிய கட்சியின் நெருக்கடியை, தீர்ப்பதற்காக தலைமைத்துவ சபை

ஐக்கிய தேசிய கட்சியின் நெருக்கடியை தீர்ப்பதற்காக தலைமைத்துவ சபையை அமைப்பது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாடுகளுடன் உள்ளனர்.

அவர்களது நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்து எதிர்வரும் பொதுத்தேர்லை எதிர்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற அஜித் பி பெரோரா ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலானோர் கட்சியின் தலைமைத்துவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் கட்சியின் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த வருட இறுதிக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இப்படியே காலத்தைக் கழிக்க வேண்டிய தான் சில நாட்களில் ஐக்கிய தேசிய கட்சி யா? எங்கே என்று தேடும் நிலை வரும்...

    ReplyDelete
  2. Why do you need a standing committee to solve the UNP problem? There is no problem there. Only problem is Ranil. If you guys kick him out, UNP will be a problem free smooth party.

    ReplyDelete

Powered by Blogger.