December 29, 2019

முஸாதிக்காவின் தந்தையின் அன்பான வேண்டுகோள், சுய கௌரவத்துடன் விளையாடாதீர்கள்


உதவி செய்கிறோம் என்று ஒருவரின் சுய கெளரவத்தில் விளையாடிவிடக் கூடாது.

ஏனெனில் பணத்தை விட தன்மானமே முக்கியம் .

இம்முறை வெளியான க பொ த உ த பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பிடித்த மாணவி முஸாதிக்காவின் தந்தையின் அன்பான வேண்டுகோள்..

அந்த வேண்டுகோளை முகநூலில் பதிவிடுகிறார் பக்கத்து வீட்டு நண்பர் யாஸீர்

சுய கௌரவத்துடன் வாழ நினைக்கும் லாபீர் நானா (மீராஸா).

லாபீர் நானா ஒருவகையான பதற்றத்துடன் கானப்படுகின்றார். தனது அன்பு மகள் முஸாதிகா மாவட்ட மட்டத்தில் முதலாம் பிள்ளையாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மகிழ்ச்சியின் மறுபக்கத்தில் தனது வங்கிக்கணக்கு இலக்கத்துடன் முகநூலில் உதவி கேட்டு பரவும் செய்தி தொடர்பாக சஞ்சலத்துடன் கானப்படுகின்றார். அது அவருடைய கணக்கிலக்கம் இல்லை என்றும் கூறுகின்றார்.

தனது சீவனும் ஆரோக்கியமும் உள்ளவரை இறைவனின் துனையுடன் தனது காய்ச்சிப்போன கரங்களை நம்புகின்றார். உலகமே பார்க்கும் வகையில் தங்களுக்காக உதவி கோரப்படுவதில் அவருக்கும் அவரின் மகள் உற்பட அவர்களின் குடும்பத்திற்கு எள்ளளவும் விருப்பமில்லை என்பது தெரிகிறது.

இவ்வளவிற்கும் அவர்களின் வாழ்க்கைத்தரம் ஒன்றும் அவ்வளவு சுலபமானதாக தோன்றவில்லை. மகளின் எதிர்காலத்திற்கு உதவி தேவைப்படினும் அவர்கள் அதற்காக விளம்பரப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. முஸாதிகாவின் மனநிலையும் அவ்வாறேயுள்ளது.

இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் தேடிச்சென்று உதவ வேண்டும். உதவி செய்ய நினைக்கும் உள்ளங்கள் அவர்களை தொடர்புகொள்ளுங்கள்.

அயல்வீட்டுக்காரர் என்ற வகையில் அவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் இவை.

கஷ்டத்திலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்காத பன்பானது ஒர் இஸ்லாமிய வழிமுறையாகும்.

(அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

4 கருத்துரைகள்:

தேடிப் போய் உதவுங்கள் அதை விட்டு விட்டு மனிதர்களின் தன்மானத்தை இழக்கும் விடயங்கலை விட்டு விடுங்கள்

முஸ்லிமுக்கு இயல்பாக இருக்க வேண்டிய பண்பு லாபிர் நாநாவின் குடும்பத்தில் காணப்படுவதில் எதுவும் புதியவிடயமன்று. பல்வேறு சிரமங்களுடன் பிள்ளையை பல்கலைக்கழக வாயிலுக்குக் கொண்டுசென்றுள்ள அவருக்கு பிள்ளையின் படிப்பை தொடர ஏற்பாடு செய்வது பெரிய ஒரு கைங்கரியமல்ல. ஏனெனில் அவருக்குப் பின்னால் இருப்பது மிகவும் சக்திவாய்ந்த என்றும் குறையாத இரக்கம் பாசத்தில் நூற்றுக்கு நூறு வீதம் காணப்படும் இரட்சகனை நம்பிய குடும்பம் அது. எனவே அவர்களுடைய பாட்டில் அவர்களை விட்டுவிடுங்கள். அப்படியும் வீடு தேடிச்சென்று அவர்களுக்கு உதவிசெய்யும் யாரும் இருந்தால் அது அவர்களுடைய விருப்பம். அதற்காக தயவுசெய்து மேளம் அடிக்காதீர்கள். எங்கள் சமூகத்தின் பெரும்பாலான புள்ளிகள் மேளம்அடித்து புகைப்படம் எடுத்து மந்தி(ரி)களையும் அழைத்து ஆரவராரம் செய்வதில் பலவருடங்களாக பழக்கப்பட்டுள்ளார்கள். அங்கே அல்லாஹ்வும் ரஸூலும் வாயில் வடிந்தோடும். உள்ளத்திலும் தனிமையிலும் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் எந்த இடமும் கிடையாது. இந்த இழி நிலையில் இருந்து அல்லாஹ் லாபிர் நாநா குடும்பம்,உங்களையும் எங்களையும் காப்பாற்றுவானாக.

மறைமுகமாக உதவி செய்யுங்கள் அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கும்

Post a Comment