Header Ads



இராணுவத்தில் இணைந்து கொண்டார் திசர பெரேரா

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரரான திசர பெரேரா இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

அதன்படி இலங்கை இராணுவத்தின் சுயேச்சை படையணியின் அதிகாரமிக்க கொமிசன் மேஜராக அவர் நேற்றைய தினம் நியமிக்கபட்டுள்ளார்.

இதனை இலங்கை இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை இராணு கிரிக்கட் அணியில் விளையாடுவதற்காகவே அவர் இவ்வாறு இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியை சார்ந்த தினேஷ் சந்திமால் இலங்கை இராணு கிரிக்கட் அணியில் விளையாடுவதற்காக இவ்வாறு இராணுவத்தின் சுயேச்சை படையணியில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.