Header Ads



நல்லாட்சியினை புறக்கணித்த பௌத்த மக்களே, பொதுஜன பெரமுனவின் வெற்றியை தீர்மானித்தனர்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள  அடிப்படை பிரச்சினைகளுக்கு  நாளை கூடவுள்ள பாராளுமன்ற குழு கூட்டத்தின் ஊடாக தீர்வு  முன்வைக்கப்படும். பௌத்த சிங்கள மக்கள்  நல்லாட்சி அரசாங்கத்தினை புறக்கணிப்பதற்கான காரணம் குறித்து  கவனம் செலுத்தப்படும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக் தெரிவித்தார்.

 நெருக்கடி நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு கட்சியை பிளவுப்படுத்த எவராலும் முடியாது. கட்சியை   பலப்படுத்த அடிமட்டத்தில் இருந்து மாற்றங்களை ஏற்படுத்தவும் தயார் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொதாவில் இன்றுb-04- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வி அடைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

தோல்வியை தொடர்ந்து ஒரு  தரப்பினரை மாத்திரம் குற்றவாளியாக்குவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.

பொதுஜன பெரமுனவின் வெற்றியை  சிங்கள பௌத்த வாக்குகளே தீர்மானித்துள்ளது. சிங்கள மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தினை முழுமையாக புறக்கணிப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரையில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

கட்சி என்ற ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் பௌத்த மத கோட்பாடுகளுக்கு ஆரம்பகாலம் தொடக்கம் முன்னுரிமை கொடுத்துள்ளோம்.

எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தை  அடிப்படையாகக் கொண்டு தற்போது  மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சி எதிர்காலம் குறித்து தீர்க்கமான தீர்மானங்களை முன்னெடுப்பது அவசியமாகும்.  ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தினை போன்று  போட்டிகளின மத்தியில் தற்போது தீர்மானங்களை எடுக்க முடியாது.

எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து தீர்வு  காண்பதற்கான பாராளுமன்ற குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இதன்போது  அனைத்து பிரச்சினைகளுக்கும் அதாவது கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு  வழங்கப்படும்..

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான  மங்கள சமரவீர,  ரஞ்வசன் ராமநாயக்க ஆகியோரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும்.

கட்சியின்  கொள்கைக்கும், பொது சட்டத்திற்கும் எதிராக செயற்பட்டவர்களுக்கு  ஒருபோதும் கட்சியில் இடம் கிடையாது. 

எமது நாட்டின் இறையாண்மைக்கு  சவால் விடுத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலே   இங்கிலாந்தின் பழமைமாத கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை  வெளியிட்டுள்ளது.

இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளமையினை ஐக்கிய தேசிய கட்சி கடுமையாக எதிர்ப்பதுடன் இரு நாடுகளின் நல்லுறவு குறித்தும் கவலையினை  தெரிவித்துக் கொள்வது அவசியமாகும்,

 மறுபுறம் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று சுவிஷ்லாந்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளமை  எமது நாட்டில் அந்த அமைப்பினால் ஏற்பட்ட விளைவுகளை அவமதிப்பதாகும்.

சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் விடுதலை புலிகள் அமைப்பு குறித்து  சுவிஸ் நீதிமன்றம்  இவ்வாறான தீர்ப்பினை வழங்கியுள்ளமைக்கும் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

3 comments:

  1. Very Wise statement.இப்ப தான் காமினி திசாநாயக்காவின் மகன் போல இருக்கு.
    இங்கிலாந்தில் உள்ள சிங்கள முஸ்லிம் டயஸ்போறாக்களின் செயல்பாடுகளை இதற்கு எதிராக திருப்பி விடுவது அவசியமாகும்.
    எங்கள் ஜனாதிபதி தமிழ் பயங்கரவாத்தை முற்றாக முடிவுக்கு கொண்டு வந்து தலைவனின் மூளையையும் பரீட்சித்து பார்த்தவர்.
    இவரது இராஜதந்திரமும் பாசிச தமிழ் புலிகளின் எச்சங்களின் குரல்வளை யை நிச்சயமாக நசுக்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  2. yanai than thalaila thane manna vari poticham.. adutan UNP da nelama. MARK MY WORD aduta parliament election alumkatsi than majority avanga 19m seerthirutta satam cancel pani, 18m satataha kondu varuvargal.. adil oruvar etanai tadavai venum endalum president a irukalam..avangada master plan adutan..

    ReplyDelete
  3. சிறுபான்மையினர் உரிமை தொடர்பாக பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கும் தலைவர்களிற்க்கு காலங்கொடுத்துப்பார்ப்பது ஜனநாயகயக நடைமுறை ஆகும். பேசிப்பார்ப்பதற்குப் பொருத்தமற்றவர் எனத்தீர்மானிக்கப்பட்டால் அதிரடி நடவடிக்கைளில்தான் ஜனநாயக நாடுகள் ஈடுபடும். இவர் புரியாதவரில்லை. சிங்கள மக்களின் நன்மதிப்பைப்பெற்றுக்கொள்ள யதார்த்தத்துக்கப்பால் பேசுகின்றார். இவர்களின் கடந்த தோல்விக்கு யதார்த்தமாக பேசியதுதான் காரணம என நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றார் போலும்.

    ReplyDelete

Powered by Blogger.