Header Ads



மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை, ஜனாதிபதி கோத்தாபய செயற்படுத்தி வருகின்றார் - டிலான்

மக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செயற்படுத்தி வருகின்றார் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

பத்தரமுல்ல - நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். 

இதேவேளை கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரங்கத்தின் பெண் அதிகாரி தற்போது சி.ஐ.டி யில் வாக்குமூலம் வழங்க முன்வந்துள்ளார்.அவரது வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதன் பின்னரே முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் கருத்து தொடர்பில் ஆரயப்பட வேண்டும். 

ராஜித்தவின் பேச்சுகள் தொடர்பில் மக்கள் தெளிவுடனே இருக்கின்றார்கள். அவர் சுகாதார அமைச்சாராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற ஒளடத மாஃபியா தொடர்பிலும் தற்போது தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இந்த சுவிஸ் விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த தி சில்வா தெரிவத்தார்.

2 comments:

  1. Insha allah your also will be bowled in next election

    ReplyDelete
  2. உண்மை தான் அடுத்த முறை உன்னையும் தோற்கடிப்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.