Header Ads



நாட்டில் பல சதித் திட்டங்கள், முன்னெடுக்கப்பட்டு வருகிறது - மகிந்த எச்சரிக்கை

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த மக்களை சீர்குலைப்பதற்காகவும் , அனைத்தின மக்களின் குடும்ப நிலைமைகளை பாதிப்படையச் செய்து பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையில் காணப்படும் உறவையும் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் காணப்படும் தொடர்பினையும்  , பிள்ளைகள் மதங்களுடன் கொண்டுள்ள தொடர்பினையும் சீர்குழைப்பதற்காக எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசனம் வெளியிட்டார்.

மாணவர்களின் பாடப்புத்தங்களில் இது போன்ற பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு செயற்படுபவர்கள் தொடர்பில் இணங்கண்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். 

அகில இலங்கை அறநெறி பாடசாலை பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை வவுனியா - இரட்டைபெரிய குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த பிரதமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். 

இன்று பௌத்த அறநெறிகளில் கல்வி கற்றுவரும் பிள்ளைகளே நாளை பௌத்த சமயத்தை அடையாளப்படுத்தப் போகின்றனர். சிங்கள பௌத்த கலாசாரம் தொடர்பில் இவர்கள் விகாரைகளினூடாகவே கற்றுக் கொள்கின்றனர். இதேபோல் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் பாடசாலை கல்வியினூடாகவே மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

இன்று பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற பாடப்புத்தகங்களிலும் அவர்களின் மனதை பாதிக்கும் வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பல தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில பாடப்புத்தகங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் ஒரு மாகாணமாக காட்டப்பட்டுள்ளதாகவும் ,  சிங்கள புத்தாண்டு தொடர்பான படங்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்றார். 

5 comments:

  1. ஆங்கில பாடப் புத்தகங்களில் இத்தகைய சதிதிட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது. இடம்பெயர்ந்த தமிழ் புலிகளின் டயஸ்போறாவின் கைகள் இச்சதியில் ஈடுபட்டிருக்கலாம்.
    இது பற்றி தீவிர விசாரணை நடத்தினால் தொடர்புடைய அத்தனை தரப்பினரையும் அடையாளம் காண முடியும்.

    ReplyDelete
  2. கல்வித்திட்டம் செயல்படுத்தல் எங்கே செல்கிறது என்பது பற்றிய எந்தவிதமான தௌிவும் இன்றி பொதுமக்களாகிய நாம் நடுத்தெருவில் விடப்பட்டிரு்க்கின்றோம்.

    ReplyDelete
  3. பாடத்திட்டங்களை எழுதும் குழுவில் சதி செய்வதற்கு ஒரு டயஸ்போராவும் இல்லை. பாடத்திட்டத்தை தயார் செய்பவர்களுக்கு போதியளவு பேபர் கொலிபிகேஷன்கள் காணப்படும் அதேவேளை பணியில் தியாகம், அர்ப்பணிப்பு,விடயத்தின் பாரதூரமான பொறுப்பு பற்றிய எந்த கரிசனையோ,விருப்போ இல்லை.இந்த பொடுபோக்கு தான் பாடத்திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள், குறைபாடுகளுக்குக் காரணம் என்பதை பொதுமக்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. சிங்கள ,முஸ்லீம் இன வெறியர்கள் தமிழ் டயஸ்பொறாவுக்கு கொடுத்திருக்கும் உருவம் மிகப்பெரியது . தங்களுடைய இயலாமையை ,குறைபாடுகளை மறைக்க இது பெரிதும் தேவைப்படுகிறது.

    ReplyDelete
  5. இலங்கையின் அரசியல், பொருளாதாரம், இறைமை,சமூக கலாசாரம், பாதுகாப்பு என்பவற்றை சீர்குலைத்தேனும் ஈழத்தை அடைந்து கொள்ள வேண்டும் என பகற் கனவு காணும் தமிழ் டயஸ்போறாவின் பணம் எங்கெல்லாம் ஊடுருவிச் செல்லும் என்பதை கடந்த காலம் பாடம் புகட்டியுள்ளது.
    பாசிசப் புலியின் எச்சங்கள் இதனை எப்போதுமே மறுத்தே வந்துள்ளன. இருப்பினும் தவளையும் தன் வாயால் கெடும் என்பது போல கோடீஸ்வரன் போன்ற அரசியல் பிச்சைக்காரர்கள் press conference களில் உளறி விடுவதும் உண்டு.
    கடந்த ஜனாதிபதி தேர்தலில் எங்களது ஜனாதிபதி கோட்டாபய அவர்களுக்கு எதிராக தமிழ் டயஸ்போறாவினால் முன்னெடுக்கப்பட்ட எதிர் வினைகள் எவையும் பயனளிக்காமை பலத்த பின்னடைவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.