Header Ads



இலங்கையில் இருந்து பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு தாக்குதல் நடத்தப்படலாம்

குற்றப்புலனாய்வு துறை அதிகாரி நிஷாந்த டீ சில்வா இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவுக்கும் தொடர்புள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவிதந்துள்ளார்.

இலங்கையை தமது இராணுவ தளமாக செயற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டும் ஒன்றிணைந்தே இந்த சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் நாடகத்தை முன்னெடுத்துள்ளன என சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம், இலங்கையில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறினார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்;

அதற்கான இராணுவ மத்திய தளமாக இலங்கையை பயன்படுத்துவதே இவர்களது நோக்கமாகும். பல நாடுகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த தாக்குதலை நடத்துவதற்கான அனைத்து வளங்களும் இலங்கையில் காணப்படுவதால் அமெரிக்கா இவ்வாறான வேலைகளை செய்கிறது.

அதனை சாதிக்கவே அமெரிக்கா முயல்கிறது. எனவே இவ்வாறான அழுத்தங்களை அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கொடுத்து வருகிறது. இந்த அரசாங்கத்தோடு விளையாட முடியாது என இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தோடு இவர்களுக்கு வேண்டிய மாதிரி விளையாடினார்கள்.

யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இருந்து நாம் மனித படுகொலைகளை செய்தோம் என இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதனை நிரூபிக்க தேவையான ஆவணங்களை இவர்கள் சேமிக்கிறார்கள்.

நிஷாந்த டீ சில்வாதான் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்தார்.

அவரிடம் அனைத்து தகவல்களும், ஆவணங்களும் இருக்கிறன. அதேபோல 1500க்கு மேற்பட்ட குற்றப்புலனாய்வு துறையினரின் கைரேகைள் தொடர்பான தடயங்களும் அவரிடமுள்ளது.

அவை அனைத்தையும் அவர் எடுத்துக்கொண்டே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவற்றைக்கூட இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றசாட்டுக்கு எதிராக ஆதாரங்களாக உபயோகிக்க முடியும்.

நிஷாந்த டீ சில்வா நாட்டைவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரை நாம் தேடுவதை நிறுத்தி எமது கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்த வெள்ளை வான் சம்பவம் அரங்கேற்றப்பட்த்துள்ளது.

இதுவரை ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளையும் நாம் சமாளித்தோம்.

ஆனால் எமக்கு வரும் பாரிய சிக்கலானது இனிவரும் காலங்களில் நிஷாந்த டீ சில்வாவின் மூலமே வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. You are the person diverting the public's attention BUT Gotta is the Pump for USA is PUBLIC secret!!

    ReplyDelete

Powered by Blogger.