Header Ads



மகப்பேற்று நிபுணராக, வேண்டுமென்பது எனது ஆசை - முசாத்திக்கா

க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இம்முறை வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலாமிடத்தை திருகோணலை ஸாஹிரா வித்தியாலய மாணவி மிராசா பாதிமா பெற்று சாதனை படைத்துள்ளார்.

மூதூர் சாபி நகரில் வசிக்கும் இந்த மாணவிக்கு இரு மூத்த சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருக்கின்றார். இவர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.

மூதூர் அல் மீனா பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்ற இவர், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பெற்ற சிறந்த பெறுபேற்றின் பயனாக, திருகோணமலை ஸாஹிராவில் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

செங்கல் உற்பத்தித் தொழில் புரியும் பாத்திமாவின் தந்தை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அவரது கல்வி நடவடிக்கையை முன்கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆயிரம் தடைகளுக்கு மத்தியில் பாத்திமாவின் கல்வி நடவடிக்கையை இடைவிடாது கொண்டு செல்ல பாடுபட்டதாக அவர் சகோதர மொழி தேசிய ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

எனது தந்தை செங்கல் உற்பத்தி செய்யும் கூலித் தொழில் செய்து என்னை படிக்க வைத்தார். மேலதிக வகுப்புக்களுக்குச் செல்ல தந்தை பணம் கொடுத்தார். எமது ஏழ்மை காரணமாக பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தேன். படிப்பதற்கு பணம் தேவைதான். இருப்பினும், பரீட்சையில் சித்தியடைய எனது ஏழ்மையை ஒரு தடையாக நான் ஆக்கிக் கொள்ளவில்லை.

எப்படியாவது தந்தை எனக்குத் தேவையான பணத்தை தேடித் தந்தார். நான் ஒரு மகப்பேற்று விசேட வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதேபோன்று, செங்கல் கூலித் தொழில் செய்து தியாகத்துடன் என்னைப் படிக்க வைத்த எனது பெற்றோர் மற்றும் எனக்கு கல்வி புகட்டிய ஆசான்களையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என திருகோணமலை மாவட்டத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற பாத்திமா தெரிவித்துள்ளார்.

கல்விக்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டிய எனது மகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்கு தான் தன்னால் முடியுமான அத்தனை முயற்சிகளையும் எடுப்பேன் என 75 வயதான பாத்திமாவின் தந்தை தெரிவித்துள்ளார் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DC

5 comments:

  1. உங்கள் இலட்சியம் நிறைவேறட்டும்.நல்ல என்னம்கொள்ளுங்கள்.
    இப்போதெல்லாம் வேண்டாவெறுப்பில் சேவைசெய்யும் மருத்துவர் களை ப் போலல்லாமல் மிகசிறப்பாக, மக்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருக்கனும்.
    இறைவன் துணை.

    ReplyDelete
  2. Marvelous achievement. My best wishes for your dream .

    ReplyDelete
  3. May almighty Allah execute your cherished dream to serve the people for Allah's sake ! Aameen.

    ReplyDelete
  4. All praise to Almighty God.May he shower his blessings upon this family and this lady.

    ReplyDelete

Powered by Blogger.