Header Ads



ஜனாதிபதியை விட பௌத்த சாசனத்திற்கு சேவையாற்றியது சம்பிக்கதான் - கொக்கரிக்கிறது ஹெல உறுமய

பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ச, அவரை விட சிறந்த சிங்கள பௌத்த தலைவரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.

1986 ஆம் ஆண்டு முதல் தேசிய பௌத்த சாசன சேவையில் ஈடுபட்டு வரும் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதியை விட இந்த நாட்டின் பௌத்த சாசனத்திற்கு சேவையாற்றியுள்ளதாக அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பிக்க கைது செய்யப்பட்ட வழக்கு மூன்றாண்டுகளுக்கு முன் முடிவுக்கு வந்தது எனவும் அந்த வழக்கில் சம்பிக்க ரணவக்க சாட்சியாளரோ, பிரதிவாதியோ அல்ல எனவும் அந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அவரை கைது செய்து, அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான உட்பட ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1 comment:

  1. மதவாதிகளின் உதவியுடன் மதவாதம் இனவாதம் பேசி ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்பதனை ஆட்சியாளர்கள் சிறிது சிறிதாக உணரத் தொடங்கியிருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.