Header Ads



அறபு மத்ரசாக்கள் ஒரே பாடத்திட்டத்தின் கீழ், இணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்

- அஷ்-ஷேக் இர்ஷாத் மூமீன் -

இலங்கையில் மார்கக் கல்வியை போதிப்பதில் அறபு மத்ரசாக்கள் அளப்பெரும் சேவையாற்றி வருகின்றன.

ஒன்றரை நூற்றுண்டுகளுக்கு மேலாக தொய்வின்றி இம்மாபெரும் சேவைகளை செய்து வரும் எமது அறபு மத்ரசாக்கள் ஒவ்வொன்றும் தமக்கென தனித்தனியான பாடத்திட்டங்களையும் தனித்தனியான சட்டதிட்டங்களையும் வைத்திருப்பதும், சில மத்ரசாக்கள் கல்வி ஆண்டின் துவக்கத்தை ஹிஜ்ரி ஆண்டின்10ம் மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆரம்பிப்பதும், இன்னும் சில மத்ரசாக்கள் ஆங்கில ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் ஆரம்பிப்பதும் இனிவரும் காலங்களில் ஆரோக்கியமான நகர்வாக இருக்காது.

இவற்றில் உடனடியாக மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

🤝 பொதுப் பாடத்திட்டம்.
🤝 பொதுப் பரீட்சை.
🤝 பொது விடுமுறை.
🤝 ஒரு மத்ரசாவில் கல்வி கற்கும் மாணவனை தேவைக் கேற்ப இன்னொரு மத்ரசாவில் சேர்த்துக் கொள்ளும் வசதி.

🤝 தகுதி அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு. மற்றும் சம்பள உயர்வு.

🤝 தேவை ஏற்படும் பட்சத்தில் ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெறும் வசதி.

🤝 இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்டு ஆலிம்கள் சேமலாப நிதித் திட்டம் (UPF)

🤝 பட்டம் பெறும் மாணவர்களில் திறைமையானவர்கள் மட்டும் ஆசிரியர்களாக இமாம்களாக நியமனம் பெறுவதற்கான பொறிமுறை.

🤝 அவர்களுக்குத் தேவையான மேலதிக வழிகாட்டல்கள், பயிற்சிப் பட்டறைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள்....

இன்னும் தேவையான மாற்றங்கள், முன்னேற்றங்கள்.

இவைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது விடயத்தில் அறபு மத்ரசாக்கள் ஒன்றியம் துணிந்து செயற்பட வேண்டும். ஒரு சிலருக்கு அஞ்சியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவர்கள் காலதாமதம் செய்யக்கூடாது.

எனது இக்கருத்துக்களோடு முரண்படுபவர்கள் தாராளமாக உங்கள் விமர்சனங்களை அனுப்பி வைக்கலாம்.

எனது இக்கருத்துக்களோடு உடன்படுபவர்கள் இந்த செய்தியை  ஆலிம்கள், புத்திஜீவிகள், மத்ரசாக்களுக்கு செலவு செய்யும் தனவந்தர்கள் என சம்பந்தப்பட்ட எல்லோரையும் சென்றடையும் வரை Share செய்யுங்கள்.

இதன் மூலம் ஏற்படும் நலவுகளில் நிச்சயம் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்.

4 comments:

  1. பொதுவான பாடத்திட்டம் என்றால் என்ன விளக்கம் தரவும் பனிவுடன்

    ReplyDelete
  2. Dear Mr.Irshad Mu'min....
    First of all what we have to do is, we have reduce the QUANTITY of our madrasass and increase the QUALITY of our madrasass. (For the sake of Allah)

    ReplyDelete
  3. சிங்கள பெளத்த பகுதிகளில் பொதுவான பாடத்திட்டம் அவசியபடலாம் என தோன்றுகிறது. மதரசாக்களில் இவைதான் கற்பிக்கபடுகிறது என்கிற வெளிப்படை தன்மையை அது உருவாக்குமல்லவா?. அந்த வகையில் வரவேற்க்கத் தக்கதே

    ReplyDelete

Powered by Blogger.