December 14, 2019

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடியோடு, தோற்கடிக்காவிட்டால் பாரதூரமான அச்சுறுத்தல்கள் வரும் - மகிந்த

ஆசியாவில் சிவிலியன்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலாக கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் காணப்படுகிறது. எமது நாடு சிறிய தீவாக இருந்தாலும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் சிறியவையல்ல என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் -13- இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடியோடு தோற்கடிக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரதூரமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த ஆபத்தை பிராந்திய நாடுகள் உணர்ந்துள்ளதுடன் இப்புதிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒத்துழைப்புகளை வழங்கவும் அந்நாடுகள் தயாராகவுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல்கள் காரணமாக கொண்டாட முடியாது போனது. ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாடு மிகச் சிறிய தீவாகும்.

நிலப்பரப்பு, கடற்படை, விமானப்படையுடன் கூடிய ஒரு தீவிரவாதமே அன்று எமது நாட்டில் காணப்பட்டது. ஆசியாவில் சிவிலியன்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலாக கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் காணப்படுகிறது. எமது நாடு சிறிய தீவாக இருந்தாலும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் சிறியவையல்ல.

2008ஆம் ஆண்டு மும்பாயில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியர்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனினும், கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய அனைவரும் இலங்கையர்களே.

இந்த அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் நலனுக்காக இந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.

இந்த ஆண்டில் இரண்டு சந்தர்ப்பங்களில், இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளதான தகவல்களால் மக்கள் அச்சமடைந்ததுடன், இந்தியாவின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தலை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் மட்டுமன்றி மியன்மார், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் தரையிலும், கடலிலும், வானிலும் செல்ல வேண்டியிருந்தாலும் புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புலனாய்வுத்துறையின் நடவடிக்கைகள் அவசியமாகிறது.

துரதிஷ்டவசமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின் புலனாய்வுத்துறை முடங்கியிருந்தது. இதேவேளை, இராணுவத்துக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கக் கூடிய கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவும் எமது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

7 கருத்துரைகள்:

Like in any other communities you may find bad individuals among Muslims.
They become bad due their lack of knowledge about the PEACEFUL Teachings of ISLAM.

When the case is like this.. WHY trying to JOIN the PEACEFUL ISLAM with the word of TERRORISM? IS is simply importing the ideology form the WEST.

We do not call
The Terrorism in Myanmar as Buddist Terrorism
LTTE Terrorism in North East as Hindu Terrorism
RSS terrorism in India as Hindu Terrorism
Zeronist Terrorism as Jews Terrorism
Christ Church Terrorism as Christian Terrorism..

We do not Join Religion to Terrorism..

Why ONLY the WORD ISLAM is joined to the terrorist act conducted by few individuals who do not even practice the teachings of ISLAM in its true form?

Whether whole world support "Terrorism",, We MUSLIMS who follow the real teachings of ISLAM ( PEACEFUL Religion), will never support such inhuman act of killing innocents people where by an individual, groups or even states.

ISLAM means PEACE. IT Teaches Peace not only to humanity but also toward nature.

AFTER YOUR TEAM CAME AS RULER NOW ALL ARE STOP BOSS

Other day Gota said "Issamic Terrorist"
Now Mahinda also said same

தமிழர்களைப் போன்று முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள். இவன் சஹறான் கூட தமிழர்களால் வழிகெடுக்கப்பட்டிருக்க
லாம்.எமது புலனாய்வு துறை இதனையும் கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஐம்பதுக்கு ஐம்பது பங்கு கேட்ட தமிழன் இலங்கை மக்களாகிய சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் ஏன் தமிழர்களைக்கூட நிம்மதியாக வாழ்வதற்கு விடமாட்டார்கள்.
கௌரவ பிரதமர் அவர்களே உண்மைக்கு உண்மையாக பயங்கரவாதம், போதைப்பொருட்களை கடத்தல்,கொலை,கொள்ளை போன்ற பாதக செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களை சிரச் சேதம் செய்துவிடுங்கள்.
ஆனால் இந்தியாவின் வழிகாட்டலை நம்பிவிடாதீர்கள்.நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்.
எங்கள் தலைவன் அதாவுள்ளாவும் என்றும் உங்களுடன் இருப்பார்.நாட்டை ஆளும் தகுதியான தலைவன் யார் என்பதை எடைபோடத் தெரிந்த சரியான ஆளுமை அவர்.

@Lafir, Both Mahinda & Gota announced that you guys are Islamic terrorists

nebosh என்ன ஆங்கிலத்தில் சொல்கிறார்,அதனை தமிழில் சொல்லிவிட்டால் தேவையானவர்கள் விளங்கிக் கொள்ளலாமே, தமிழில் தட்டச்சு தெரியாவிட்டால் அதைத் தெரிந்து கொண்டு களத்து வந்தால் எல்லோருக்கும் சுகம்.

இஸ்லாம் உயிரோட்டமுள்ள மார்க்கம் இதில் உயிரற்ற மூடநம்பிக்கைகளோ சடங்கு சம்பிரதாயங்களோ தீவிரவாதமோ இல்லை தீவிரவாதத்தையும் மூடநம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் பின்பற்றுபவன் இஸ்லாத்தினுள்ளே இருந்தாலும் அல்லது வெளியே இருந்தாலும் பாரிய நஸ்டத்திலும் வழிகேட்டிலுமே இருக்கிறான் இஸ்லாத்திற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ அவனெடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அவனை அதளபாதாளத்திற்கே தள்ளிவிடும் அவனால் இஸ்லாத்திற்கு எந்தவித தீங்கோ நன்மையோ செய்ய முடியாது யார் தெளிந்த உள்ளத்துடன் வரும் இன்னல்களை சகித்துக்கொண்டு தியாகத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் பரிசுத்தமான வாழ்கையை நாடி முயற்சிக்கிறாரோ அவர் இம்மையில் மணமானவாழ்வையும் ஆகிறாவில் வளமானவாழ்வையும் பெற்றுக்கொள்வார்

Post a comment