Header Ads



வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் கல்குடாத் தொகுதியிலுள்ள பல வீதிகள், வயல் நிலங்கள், குடியிருப்புக்கள், மேய்ச்சல் தரைகள் என்பன நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி, பொத்தானை, புணாணை கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிராமத்தில் இருந்து வெளி இடங்களுக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் வெள்ள நீரை கடந்து செல்கின்றனர்.

அரச மற்றும் அன்றாட தொழிலுக்கு செல்லும் மக்கள் வீதியினை மறித்து நீர் செல்கின்ற போது பயணிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதுடன், மழை காலங்களில் அச்சத்தின் மத்தியிலே பயணிக்கின்றனர். அத்தோடு வாகனேரி பகுதியில் வேளான்மை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கதிர்வரும் காலத்தில் வெள்ள நீர் வயல்களுக்கு சென்று வேளான்மைகளை அழிக்கும் அளவிற்கு வெள்ள நீர் காணப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது.

மேலும் வாகனேரி, காவத்தமுனை பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் கால்நடை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை உரிய இடத்தில் கட்டவோ அல்லது புற்களை உண்ணவோ முடியாத நிலையில் கால்நடைகளை வெள்ள நீரினூடாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லக் கூடிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மீண்டும் மழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் அனைத்திலும் வெள்ள நீர் நிறைந்துள்ளது. இதேவேளை தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் மன்னப்பிட்டியில் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதனால் அவ்வீதி ஊடான பிரதான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

(எஸ்.எம்.எம்.முர்ஷித் - 

No comments

Powered by Blogger.