Header Ads



சுவரோவியங்கள் முஸ்லிம்களுக்கு, ஏதாவது செய்தி சொல்கின்றனவா...?

- Safwan Basheer -

சுவரோவியம்
இந்த Trend அழகானது.
வரவேற்கத்தக்கது.
இலங்கை ஒரு பெளத்த நாடு.
எனவே அவர்கள் அவர்களுக்குத் 
தேவையான வற்றைதான் வரைவார்கள்
ஏற்றுக் கொள்கிறோம்.
ஓவியத்தை ஓவியாமாகப் பாருங்கள் என்கிறார்கள்
பார்க்கிறோம் அதிலும் பிரச்சினையில்லை.
ஆனால் ஒரு பிரச்சினை இருக்கிறது.
இந்த சுவர்களில் ஓவியம் வரைவதிலும்,
வரையப்படும் ஓவியங்களிலும் ஒரு நுண் அரசியல்
இருக்கிறது.
பொதுவாக சிங்களவர்கள் ஓவியம் வரைந்தாலே
அவர்களது கலாச்சாரம் சார்ந்த விடயங்களையும் இயற்கை காட்சிகளையும்தான் வரைவார்கள்
கண்டி பெரஹரா,நடனக் கலைஞர்கள்,நடனமாடும் போது அவர்கள் பயன்படுத்தும் முகமூடிகள்,யானைகள்,
நீர்வீழ்ச்சிகள்,சந்திரவட்டக்கல்,சீகிரியாக் குன்று இப்படியான விடயங்களைத்தான் வரைவார்கள்.
ஆனால் இங்கு வரையப்படும் சுவரோவியங்கள்
அப்படியானவை அல்ல 
அவை ஒரு வகையான பெளத்த மேலாதிக்கப் போக்கையே சித்தரிக்கின்றன.
தற்போது இலங்கையில் "சிங்கம்" என்பது
சிங்களவர்களையே குறிக்கின்றது.
இந்த சுவரோவியங்களில் அதிகமான இடங்களில்
சிங்கத்தின் தலைதான் வரையப்பட்டு இருக்கின்றது.
அடுத்து அநாகரிக தர்மபால,பெளத்த கொடி,
பிரத்தானியாவில் தனது ஆடையில் இருந்த தேசியக் கொடியைக்காட்டிய இராணுவ அதிகாரியின் உருவம் போன்ற ஓவியங்களும்
அதிகமான இடங்களில் வரையப்பட்டுள்ளன.
இது சூழலை அழகுபடுத்துவதை மட்டும் இலக்காகக் கொண்ட ஒரு செயற்திட்டமல்ல.
இந்த சுவரோவியங்களைப் பார்க்கும் பொழுது
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு
ஒரு செய்தியை பெரும்பான்மை சமூகம் சொல்வது போன்றே இருக்கிறது.
இந்த ஓவியங்கள்
பெளத்த மேலாதிக்க மனோநிலையை 
மக்கள் மனதில் பதியவைக்கும் ஒரு அரசியலே தவிர வேறெதுவுமில்லை.

5 comments:

  1. ஒன்றும் கிடையாது விட்டு வேலை யை பார்க்க வேண்டியதுதான். அது அப்படி இருக்கும் இது இப்படி இருக்கும் என்ற கற்பனை எல்லாம் தேவையில்லை...

    ReplyDelete
  2. Fir awn super power leader.
    He said iam the god.
    But what happend to him.Almighty
    Destroy him.likewise we dont wont worry.allah newer help oppressing people at all.

    ReplyDelete
  3. ITS ORDERED BY MR.WHITE VAN!

    ReplyDelete
  4. உருவ படங்கள் எல்லாம் ஹராமே .

    ReplyDelete
  5. Why Muslims can't draw to express their remarkable numerous contributions to build this nation?

    ReplyDelete

Powered by Blogger.