December 29, 2019

முஸ்லிம் சிறார்களே,, தேவாலயத்திற்கு அருகில் இப்படிச் செயற்படுவது நல்லதல்ல...!

- Sivarajah Ramasamy - 

கொழும்பு புதுக்கடை ,பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்குமிடையில் நான் வசித்து வருகிறேன்..

சுமார் 10 முதல் 12 வயதுள்ள சில முஸ்லிம் சிறார்கள் இந்த வீதிக்கருகில் எந்த காரணமும் இல்லாமல் ஏதோ ஒரு பொழுதுபோக்குக்காக பட்டாசு வெடித்து மகிழும் நிகழ்வு கடந்த பல மாதங்களாகவே இடம்பெற்று வந்தது..

சில வாரங்களுக்கு முன்னர் எனது காருக்கடியில் பட்டாசை அவர்கள் கொளுத்தியபோது அவர்களை நான் கடிந்து இப்படி செய்ய வேண்டாமென சொன்னேன்..எனது நண்பரான முதிய ஹாஹியார் ஒருவரும் அதனை ஏற்று என்னுடன் இணைந்து அவர்களை கண்டித்தார்.

இன்று -29- மீண்டும் அந்த சிறார்கள் பட்டாசு மற்றும் பம்பரம் என்று சுழலும் பட்டாசுகளை மாலை கருக்கும் நேரம் போட்டார்கள்... வீதியில் போவோர் வருவோர் அச்சப்படும் வகையில்... வீதியில் போகும் ஓட்டோக்கள் மீது பாயும் வகையில் அவை இருந்தன.

பண்டாரநாயக்க மாவத்தை தேவாலயத்தினருகே பட்டாசுகள் சென்றதால் மாலை ஆராதனை குழம்ப அங்கு காவலுக்கு நின்ற இராணுவச் சிப்பாய் சிறார்களை நிறுத்தும்படி சொல்லிக்கொண்டே அவர்களை விரட்டி ஓடினார்... இன்னுமொரு சிப்பாய் ரி 56 துப்பாக்கியுடன் ஓடினார்...

நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்... அன்று கண்டித்த ஹாஜியார் அப்போது அந்த இடத்திற்கு வந்து என்னை பார்த்தபடி நின்றார்... இருவரும் செய்வதறியாது நின்றோம்...

அவர்களை விரட்டிச் சென்ற சிப்பாய் ஒரு பையனை பிடித்து கண்டித்து பள்ளிவாசல் நிர்வாகத்திடம் நிலைமையை சொல்லி கண்டித்துள்ளார்.பின்னர் ஒரு நிர்வாகி தேவாலயத்திற்கு வந்து பாதரிடம் வருத்தம் தெரிவித்ததை கண்டேன்...

சிப்பாய் பின்னர் என்னை வீதியோரம் கண்டபோது தான் பொறுமையாக நடந்து கொண்டதாகவும் அந்த சிறார்களின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை என்றும் கூறி கவலைப்பட்டார்...

“ ஆராதனை நடக்கும் நேரம் இப்படிச் செய்வது சரியில்லை தானே...” என்றும் அவர் குறிப்பிட்டார்...

“எப்படியோ இனி இப்படி நடக்காது என்று நினைக்கிறேன்..” என்று கூறியபடி நானும் வீடு சென்றேன்...

இது ஒரு சாதாரண நிகழ்வல்ல...

ஒரு பெரிய களேபரம் இராணுவச் சிப்பாயின் அந்த பொறுமையால் தவிர்க்கப்பட்டதாக நான் உணர்கிறேன்...

பெற்றோர்களே பிள்ளைகளை பற்றி கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்...

வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா? சிந்தியுங்கள்.. !

11 கருத்துரைகள்:

நல்ல பதிவு!

சிறுவர்களின் பெற்றோர் இதைப்பற்றி சிந்தித்து தங்களின் பிள்ளைகளை இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும்.இது மோசமான சம்பவம் எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் இதை அந்த பிரதேச பள்ளி நிர்வாகிகள் குறித்த பெற்றோரை அழைத்து ஆலோசனை வழங்க வேண்டும்.

This type of child play itself caused massdestruction on Muslims in the past. Nowadays Muslim youngsters and adults should be very careful around us BCS some thugs are awaiting chance to any clashes against us

இது மிகமுக்கியமான சிவப்புக் கொடி,இந்த காலகட்டத்தில் ஒருபோதும் இடம்பெறக்கூடாத,கண்டிக்கப்பட வேண்டிய, உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினை.இதன் விளைவு, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ பொறுப்பெடுக்க வேண்டிய ஒரு குற்றச் செயலாக அது பூதாகரணமாக தோற்றம் பெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. கடைசியாக ஸஹ்ரானிடம் பயிற்சி பெற்ற சிறுவர்கள் என்ற பெயரையும் இறுதியில் சூட்டிவிடுவார்கள். எனவே, பள்ளிநிர்வாகத்தினரே,பெற்றோர்களே, உடனடியாக இந்த செயலை நிறுத்தி,அந்த பிள்ளைகளுக்கு ​வேறு நல்ல விளையாட்டுகளை திட்டமிட்டுப் பழக்கவும் நல்ல பல பயிற்சிகளில்அவர்களை ஈடுபடுத்தவும் தன்னார்வ இயக்கங்கள், நிறுவனங்கள் உடனடியாக முன்வந்து செயலில் இறங்க வேண்டும்.தயவுசெய்து பொறுப்பானவர்கள் எந்த வித தாமதமும் இன்றி உடனடியாக களத்தில் இறங்கி இந்த நிலைமைச் சீராக்க முயற்சி எடுங்கள். அல்லாஹ் உங்கள் தூய பணியில் உதவி செய்வான் இன்ஷா அல்லாஹ்.

இத்தகைய சிறு பொறிகளை அலட்சியம் செய்தால் பெரும் தீவிபத்து தவிர்க்க முடியாது. மதங்களோடான சமரசங்களுக்கு சகல சமய பள்ளிகளும் ஆசிரியர்களும் பொறுப்பு எடுக்க வேண்டும்.ஊடக செய்தியாகிவிட்டதால் சமூக மட்டத்தில் வருத்தம் தெரிவித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,

Many Colombo Muslim children are rowdies and don't even listen to their parents. They will behave nicely when they have learnt a lesson from someone.

சுட்டிருக்கலாம்.
சில வேண்டா வெறுப்பில் தப்பி தவரி பிறந்த குழந்தை களும் இப்படி பெற்றோரில்லாமல் கட்டுக்கடங்காமல் திறிவதுண்டு.
பெற்றோருக்கு மார்க்கம் தெறிந்தால்தானே பிள்ளைகளுக்கும் தெறியவரும்!

@MR.GHOUSE how you can said that Colombo children are rowdies? mind your word before you comment. of course I agree what your going to say but not at all place there some particular area but your mentioned entire COLOMBO children are rowdies.edit your comments.

எல்லா இனப் பிள்ளைகளும் ஒரே மாதிரித்தான். பல சிங்கள தமிழ் நகர முஸ்லிம் தெருக்களில் இடப்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பவே குழந்தைகள் அவர்கள் ஓய்வு விழையாட்டு தொடர்பாக திட்டமிட்டு அமைப்புகளை உருவாக்கவேண்டும். சிறுவர் மற்றும் கலாச்சார பாடசாலை ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உளவியல் பயிற்ச்சி உகந்தது. இடப்பிரச்சினையை தீர்க்கமுடியாத சூழலில் இத்தகைய வழிகள்தான் நிலமையை செம்மைப் படுத்தும். இதுவே இடப்பிரச்சினையை மேவி இனச்சிக்கல்களையும் மனச்சிக்கல்களையும் கோபக்கார குழந்தைகளையும் உருவாக்கும் ஆபத்தை தவிர்க்கும் வழிமுறையாகும்.

திரு சிவராஜா ராமசாமி மற்றும் திரு ஜெயபாலன் ஆகியோரை மனமார பாராட்டுகின்றேன். எமக்கு இவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக உணர்கிறேன்

உண்மையில் இதனைப் பதிவிட்ட சிவராசா இராமசாமி அவரகளுக்கும் ஏனைய நெட்டிசன்களுக்கும் மரியாதை கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது ஒரு சமூகம் சார்ந்த மிக முக்கிய விடயம். தவிர ஜெயபாலன் ஐயாவினுடைய கருத்துக்கள் மதிக்கப்படவேண்டியவை. ஆயினும் சிவராசா அவரகளுடைய கருத்தினை அந்த வீதியில் வாழும் எத்தனை பேர் வாசித்து இருப்பார்கள. நூனும் பல காலமாக குறித்த தெருவில் வாழ்ந்தவன் என்ற வகையில் அந்தப் வீதியில் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பது புரிகின்றது. உறவினர் வீட்டிற்கு சென்று 10 நிமிடங்கள் பேசிவிட்டு வருவதற்குள்ளாகவே என்னுடைய காரின் Side mirror ஐ அபேஸ் செய்துவிட்டனர். எனவே இந்த விடயம் மிக மிக பாரதூரமானதாகும் தேவாலயத்தைவிட அங்குள் மஸஜிதும் இத் தெருவில் வாழும் முஸ்லிம் மக்களும் இந்த விடயத்தில் தீலிர கவனம் செலுத்தி பிள்ளைகளைத் தூய்மைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

Post a Comment