Header Ads



சட்டத்திற்கு உட்பட்டே, சம்பிக்க கைது - பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சட்டத்திற்கு உட்பட்டே கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். 

கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் ஆணைக்குழு கூடிய போது பிரதி பொலிஸ்மா அதிபர் வாய்மூலம் இதனை அறிவித்தாக ஆணைக்குழுவின் செயலாளர் நிசாந்த வீரசிங்க தெரிவித்தார். 

உரிய நடைமுறைகளுக்கு அமையவா? பாட்டாலி சம்பிக்க ரணவக்கவை பொலிஸார் கைது செய்தனர் என ஆராயுமாறு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரை கடிதம் மூலம் கேட்டிருந்தார். 

இதனை அடுத்து குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை கோருவதற்கு பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது. 

இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்யும் போது உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா? என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டது. 

இதற்கமைய பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சட்டத்திற்கு உட்பட்டே முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக சபாநாயகர் கருஜயசூரியவை தெளிவுபடுத்த பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

தேசிய பொலிஸ் ஆணைக்குழு அடுத்த வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.