Header Ads



தேசிய கீதத்தை 2 மொழிகளில் பிரிப்பது, பிரபாகரனுக்கு செய்யும் அவமதிப்பு

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என எடுத்த தீர்மானம் சரியானது என நாராஹென்பிடிய அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் இன்று -29- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டை துண்டாக பிரிக்க முயற்சித்த பிரபாகரனின் காலத்தில் கூட எமது தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை.

இப்படியான நிலைமையில் நல்லாட்சி அரசாங்கம் செய்த தூர நோக்க செயலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு சுமந்திரன் போன்றவர்கள் கோருவர்கள் என்றால் அது பிரபாகரனுக்கு செய்யும் அவமதிப்பு.

பிரபாகரன் நாட்டை பிரிக்குமாறு கூறினாலும் தேசிய கீதத்தை பிரிக்குமாறு கூறவில்லை எனவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. ஆம் பிரபாகரனுக்கு மதிப்பளித்து தேசிய கீதத்தை பிரிக்கவேண்டாம். அவர் விரும்பியபடி மதிப்பளித்து நாட்டைப் பிரிக்கவும்.

    ReplyDelete
  2. என்ன டயலொக்

    ReplyDelete
  3. தேசிய கீதத்தில் இருந்து தமிழை ஒதுக்கும் கருத்துக்கள் மட்டுமே பரிமாறப் படுகிறது. முடிவு எதுவும் அரசினால் எடுக்கப்படவில்லை. தமிழர் எதிர்ர்பு வலுத்து வருகிறது. ஏற்கனவே சர்வதேச செல்வாக்கு கேழ்விக்குறியாகிவரும் சூழலில் அரசுக்கு தேசிய கீதத்தில் தமிழை ஒதுக்கும் முடிவை எடுப்பது அவ்வளவு இலகுவாக அமையாது.

    ReplyDelete

Powered by Blogger.