Header Ads



"2 ராஜ்ஜியங்கள்" கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல், விஞ்ஞாபனம் இலங்கைக்கு பொருந்தாது


இலங்கைக்குள் இரண்டு ராஜ்ஜியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்து தொடர்பில் விளக்கம் கோரி அந்த நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த கடிதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கு அனுப்பபட்டுள்ளது.

பிரித்தானிய நிர்வாக கட்சியின் கொள்கை பிரகடனத்தில் இவ்வாறான விடயம் அடங்குகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு முன்னதாக பிரித்தானியாவின் எந்தவொரு அரசியல கட்சியும்  இது போன்ற நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தவில்லை.

இதன்மூலம் இலங்கைக்கு எதிராக செயற்படும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் சில அடிப்படைவாதிகளுக்கு உந்துசக்தி கிடைக்க பெறும் என பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு கன்சர்வவேட்டிவ் கட்சி பதில் வெளியிட்டுள்ளது.

இரண்டு ராஜ்ஜியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தமது கொள்கை பிரகடனத்தில் அடங்கியுள்ள சரத்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் என அந்த கட்சியின் பிரதி தலைவர் போல்ஸ் கல டுவிட்டர் பதவில் குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கைக்கு பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. ரனிலின் நரி தந்திரம் மாதிரி தமிழர்களது வாக்குகளை பெறுவதற்கு கொன்சவேடிவ் கட்சியின் புளுகு மூட்டையாக இத்தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
    இருந்தாலும் இவ் அழகிய புண்ணிய பூமியை உடைத்து இரு துண்டாக்க அதாவுள்ளா ஆதரவளிக்கும் கோட்டாபய அரசும் கிழக்கு முஸ்லீம்களும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்
    பெடியள் விடாவினம்.
    அஜன் இது எப்புடி ஈக்கி.

    ReplyDelete
  2. இலங்கையை இரண்டாக உடைத்து இரு நாடாக மாற்ற முனைவது கனவு.ஆனால் அவர்களே மீண்டும் சொல்லி விட்டார்களே அது இலங்கைக்கு அல்ல வேறு இரு நாடுகளுக்கு என.எனவே இத்தோடு இந்த விவாதத்தினை விட்டு விடுவோம்.

    ReplyDelete
  3. Lafir bro ajan has a rare sickness.don’t take seriously when he comment.ajan like a comedian.

    ReplyDelete
  4. இது மட்டுமல்ல இந்த ஆட்சித்தலைவரும் அவரின் படை பட்டாளங்களும் அதிகாரத்தில் இருக்கும் வரை ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இவ்வாறான நடவடிக்கைகளிலீடுபடும் என்பதை புரியமுடியாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.