Header Ads



269 ஏக்கர் கடற்பகுதி, இன்று இலங்கையுடன் இணைக்கப்பட்டது


கொழும்பு துறைமுக நகர் இலங்கையின் நிலப்பரப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று -07- நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன அரசாங்கத்தின் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது துறைமுக நகரில் முதலீடுகளை செய்ய வருமாறு முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலிலுள்ள 269 ஏக்கர் கடற்பகுதி நிலப்பரப்பாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு சகல வசதிகளையும் பிரமாண்டமான நகரம் அமைக்கப்படவுள்ளது.

சீனாவின் C.H.R.C எனப்படும் சைனா ஹாபர் என்ஜினியரின் கோபரேஷன் நிறுவனத்தினால் இந்த திட்டத்திற்காக 1.5 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டிற்காக இங்கு திறக்கப்பட்டது. கொழும்பு துறைமுக திட்டமானது நேரடி வெளிநாட்டு முதலீட்டினை மையப்படுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தின் இரண்டாவது கட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதன் கீழ் நெடுஞ்சாலை, மின்சாரம் மற்றும் நீர் கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று மாலை நடைபெற்ற நிகழ்வின் போது வானவேடிக்கை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.