ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்காக அண்மையில் இணைந்து கொண்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி தலைமைத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட எந்தவித அதிகாரமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித்பிரேமாஸவுடன் கலந்துரையாடி அது தொடர்பிலான தீர்மானம் ஒன்றுக்கு வருவதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து வந்த ஒரு சிலருக்கு கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் கருத்துக்களை கூறுவதற்கு அதிகாரம் இல்லை.
அவர்கள் முதலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் தலைமைப்பதவி குறித்து விமர்சனங்களை வெளியிடுவதற்கான உரிமை அவர்களுக்கு கிடைக்க பெறும்
அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு சபாநாயகருக்கு பிரத்தியேக பேஸ்புக் கணக்கு ஒன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற சம்பிரதாயங்களை அறிந்த எவரும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்..
0 கருத்துரைகள்:
Post a Comment