Header Ads



புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தனவை நியமிக்க பரிந்துரை - கலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம்

தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் 5 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், மக்களின் ஆணையை ஏற்றுக் கொண்டு பதவி விலகும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்பட்டதாகி விடும்.

நாளை அதிபராகப் பதவியேற்றதும் புதிய அமைச்சரவையை கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார்.

இந்த நிலையில், புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தனவை நியமிக்குமாறு விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது,

2 comments:

  1. Expired stuff, may perhaps endanger the other valid stuffs in the stock. beware of it and perhaps always better to recheck its validity and functionality.

    ReplyDelete
  2. MR PRESIDENT GOTABAYA TAJAPAKSHA, PLEASE DON'T GIVE A WRONG SIGNAL BY APPOINTING A RACIST AS PRIME MINISTER.

    ReplyDelete

Powered by Blogger.