Header Ads



வாக்களிப்பு மந்தகதி,, மழையும் பெய்யும் சாத்தியம், உடனடியாக போய் வாக்களியுங்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. 

இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும். 

இதன்படி இன்று காலை 10.00 மணிவரை  காலியில் 25 சதவீத வாக்குப் பதிவுகளும், கண்டியில் 30 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. 

மேலும் கம்பஹாவில் 30 சதவீத வாக்குகளும், அனுராதபுரத்தில் 30 சதவீத வாக்குகளும், நுவரெலியாவில் 40 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை மாத்தறையில் 30 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டையில் 25 சதவீத வாக்குகளும், திருகோணமலையில் 25 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 44 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 25 சதவீத வாக்குகளும், மன்னாரில் 30 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

2

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் நவம்பர் 16 ஆம் திகதி மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும்ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும்குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும்காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.