November 03, 2019

தீவிரவாத முஸ்லிம் தலைவர்கள், சஜித் பக்கமே உள்ளனர் - கருணா

கிழக்கு மாகாணத்திற்கு மீண்டும் முஸ்லிம் ஆளுனரையோ முதலமைச்சரையோ எம்மால் ஏற்க முடியாது என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தமிழ் தலைமைத்துவத்தின் கீழ் கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

கிருலப்பனையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதில் மேலும் கருத்து தெரிவித்த அவர்.

ஐ.தே.க அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கில் மீண்டும் முஸ்லிம் தலைமைத்துவம் ஒன்றே மேலோங்கும்  இந்த இடத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.  பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்க்ஷவை வெற்றி பெற வைக்கும்போதே தமிழ் மக்களின் இருப்பை தக்கவைத்து கொள்ள முடியும்.

தமிழ் மக்களை கோத்தாபாய முற்றுமுழுதாக நம்பியுள்ளார். யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மூலம்  வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என பல செயற்திட்டங்கள் மூலம் பாரிய அபிவிருத்திகள் செய்யப்பட்டன.

அன்று பல்லாயிரகணக்கான போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்திற்குள் சேர்க்கப்பட்டனர். இன்று ரணிலின் அரசாங்கம் 134  அரசியல் கைதிகளை கூட விடுவிக்க முடியாமல் தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர். கோத்தாய அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வாக்குறுதி வழங்கியுளளார். கல்முனை பிரதேச  சபை செயலகத்தை தரமுயர்த்தி தருவதாகவும் ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருவதாகவும் மலையக மக்களுக்கான சம்பள பிரச்சினைகளையும் தீர்த்து தருவதாக அவர் வாக்குறுதி வழங்கி உள்ளார்

ரவூப் ஹக்கீம் சஹரானின் சகாக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார் இவ்வாறானதொரு தீவிரவாத முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவின் பக்கமே உள்ளனர் தமிழர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் ஐக்கிய தேசிய கட்சியில் இல்லை இதனை எதிர்த்தே தமிழர்களாகிய நாங்கள் கோத்தாபயவிற்கு எங்களின் ஆதாரவினை வழங்கி உள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளது. சம்பந்தனுக்கு தெரியும் கோத்தாபாய நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அவர் ஏற்கனவே அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். கோத்தபாய வெல்வது உறுதி எனவே நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். நீங்கள் விரும்பியோருக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். இதனையையும் மீறி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு பின்னால் செல்வார்கள் எனின் அவர்கள்  பாரிய ஒரு இன சுத்திகரிப்பிற்கு வித்திடுகிறார்கள் என்றுதான் அர்த்தம் என்றும் அவர் கூறினார்.

12 கருத்துரைகள்:

Ivan munnal ltte hindu payangaravathai...

தீவிரவாத முஸ்லிம்கள் என்று யாரும் இருக்க வும் இல்லை தற்போதும் இல்லை. ஏப்ரல் தாக்குதலை நடத்தியது கோட்டாவுடன் சேர்ந்து நீதான்

SORI NAAYA HWO DEMOLISH THE COUNTRY YOU OR MUSLIM

உனக்கும் ஸஹரானுக்கும் என்ன வித்தியாசம்?

Paitthiyakaran patthum solwan pokattum vittuvidungu

Ahhaaa intha kalutha ennamo nallawar pola pesuraru
iwan oru oonai
tamilarhalai army udan sernthu konru kuviththawan

நீயும் ஒரு முன்னாள் கொலைகாரன்

Great comedy. We could not stop laughing

பிக்பக்கெட் காரர் பொது இடங்களில் கத்திக்கொண்டு இருப்பார் "கவனம் பிக்பக்கெட் காரன் இருக்கான்,கவனம் பிக்பக்கெட் காரன் இருக்கான்"..... என்று இந்த கருனா மற்றும் பல பயங்கர வாதிகளின் கூட்டு தான் கோத்தா அது மட்டுமல்ல இனவாதிகள் அதிகமாக உருவாக்கப்படும் இடமும் அங்குதான் UNP யும் முஸ்லிம்களுக்கு பல விதங்களில் தீங்கு செய்த கட்சி என்பதை மறந்துவிட வெண்டாம் ஆகவே அனுர தான் முஸ்லிம்களின் தெரிவாக இருக்கனும்

Is this man worth for speaking at a meeting.. pohottuwa has many such scraps.

முதல்,கடைசி தீவிரவாதியும் தொழுகையில் நின்ற முஸ்லிம்களைக் கொலை செய்த கொலையாளியும் நீதான்.மதவெறுப்பும், தீவிரவாதமும் தவிர்ந்த வேறு ஏதாவது உனக்குத் தெரியுமா?

Jaffnamuslim should change heading with ..."munnal teevirawadi amaippu urupinar Karuna".

Post a comment