November 23, 2019

"தாம் இன்றி சிங்கள தலைவரை தெரிவுசெய்ய முடியாதென்ற சிறுபான்மையினர் நினைப்பு தற்போது மாறியுள்ளது"

நாட்டிற்குள் எந்த அபிவிருத்தி பணிகளை செய்தாலும் தேசிய பாதுகாப்புக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என மல்வத்து பௌத்த பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் போது வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். தன்னை சந்திக்க வந்த உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் விமலதம்ம தேரர் இதனை கூறியுள்ளார்.

தாம் இன்றி சிங்கள பௌத்த தலைவரை தெரிவு செய்ய முடியாது என சிறுபான்மையினர் நினைத்தாலும் அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்யும் போது, எந்த வகையிலும் சிறுபான்மையினரை மறக்கக் கூடாது.

சிறுபான்மையினருக்கு எதிராக அல்ல, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் விமலதம்ம தேரர் குறிப்பிட்டுள்ளார்.

6 கருத்துரைகள்:

சிங்கள பௌட மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு தலைவரை தெரிவு செய்து விட்டார்கள். இப்பொது சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஒன்று சேரவேணடிய நேரம் வந்துவிட்டது.

சம்பந்தன் ஹக்கீம் மனோ ரிஷாட் திகாம்பரம் எல்லோரும் எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒரு கூட்டணியை அமைத்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் குறைந்த பட்சம் 40 ஆசனங்களையாவது கைப்பற்றலாம். அதன்பின் அமையப்போகும் அரசோடு மிகப்பெரிய பேரம் பேரம் சக்தியாக உருவெடுக்கலாம்.

ஆகவே சிறுபான்மை கட்சி தலைவர்களே உங்கள் சுயலங்களை ஒருபக்கம் வைத்திவிட்டு இப்போதாவது எமது சமூகங்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்து ஒரே அணியாக களத்தில் இறங்குங்கள். பிளவு பட்ட எம் சமூகம் ஒன்றாகும், பல வெற்றிகளையும் நிச்சயமாக அடையாளம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

MR SHEHAPDEEN YOU ARE DREAMING THIS WILL NEVER HAPPEN.TAMILS HAVE VICKEDNESWARN,KAJA PONNAMPALAM AND SAKILI SIVAJI LINGAM.MUSLIMS HANE HISIBALLA,ATHAUDA AND SEKUBASEER DAWOOD,AND HASAN ALI.THIS WILL BE A DIFFCULT TASK.

Good for Tamils,
Very Bad for Muslims.

ஏனெளில், தமிழர்கள் ஒரு போதும் மத்திய ஆட்சியில் பங்கேற்க விரும்புவதில்லை. எனவே எப்படியிருந்தாலும் who cares?

முஸ்லிம்கள் எப்போதும் மத்திய ஆட்சியில் போட்டிபோட்டுக்கொண்டு இணைந்து பல அமைச்சுபதவிகளை பெறும் பேராசை கொண்டவர்கள்.
கடந்த தடவை 21 முஸலிம் MP (இது 100%) களும் ஆளும் கட்சிவரிசையில் ஓடிபோய் அமரந்துகொண்டார்கள். 10 அமைச்சுபதவிகளும் 3 கவர்னர் பதவிகளும் பெற்றுக்கொண்டாரகள்.
எனிமேல் இவைகள் எல்லாம் அம்போ தான்.

தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையையும் கோட்டா அரசு முற்றாக ஒழித்துவிட்டுவரானால், முஸ்லிம் MPகளின் எண்ணிக்கை 21 யிருந்து 7 ஆக பெரும் வீழ்ச்சியடையும். தமிழ் MP களின் எண்ணிக்கை மாறுபடாது.

ஏற்கனவே, ராணுவம் வைத்திருந்த 90% காணிகளை தமிழர்கள் பலவழிகளில் மீழபெற்று விட்டார்கள். மீதமுள்ள காணிகளை மீழ் பெறுவது என்பது அரசாங்கத்திற்கும் UNHRC (மேற்கு நாடுகள்) க்கும் உள்ள பிரச்சனை, நமது பிரச்சணை அல்ல.

ஆனால் நாடு மட்டும் முன்னேராது.ஏனெனில் நீங்கள் அனைவரும் இன்னும் 18 ம் நூற்றாண்டில் இருக்கிறீர்கள்

This monk has easily forgotten that Christians, Hill country Tamils, and few Muslims have also contributed in the winning of GR.

Post a comment