Header Ads



சுதந்திரக்கட்சியை அழிக்க, இரகசிய உடன்படிக்கை - மைத்திரிக்கு கடிதமனுப்பிய சந்திரிக்கா

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க தாம் முன்வந்தமையின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்வந்தமையை சந்திரிகா கண்டித்துள்ளார்.

கட்சி யாப்பின்படி மத்தியக்குழுவை கூட்டியே முடிவெடுத்திருக்கவேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூன் 2018 இல் இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்துக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவி;ல்லை

எனினும் இந்தமுறை தாம் வெளிநாடு சென்றிருந்தபோது மத்தியக்குழுவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிப்பதற்கான இரகசிய உடன்படிக்கையில் கடந்த மாதம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவரான மஹிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை எடுத்தபோது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதற்கு எதிராக நடவடிக்கையை எடுக்கவில்லை.

அத்துடன் ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை என்று சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

Powered by Blogger.