Header Ads



நான் இன்னமும், அமெரிக்க குடிமகன்தான் - பசில்


ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய தோல்வி அடைந்தால், தான் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய ராஜபக்ச கைவிட்டுள்ளார். எனினும் போதிலும் தான் இன்னமும் அமெரிக்க குடிமகன் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் தான் அமெரிக்காவிற்கு செல்வதற்கு தயார். எனினும் அதற்கு இலங்கை நீதிமன்றத்தின் அனுமதி அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை. எதிர்வரும் காலங்களில் முகம் கொடுக்கவுள்ள பிரச்சினைகளின் போது வேறு நாட்டில் குடியுரிமை பெற்றிருப்பது முக்கியமாக கூடும். அத்துடன் எந்தவொரு நபருக்கு இன்னுமொரு நாட்டில் குடியுரிமை பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை.

நாட்டு மக்களுக்கு இது தொடர்பில் பிரச்சினை உள்ளதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி மக்கள் வழங்கும் தீர்மானத்தில் உள்ளதென பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. எத எப்ப பேசனும் என்ற விவஸ்த்தையே இவனுகளுக்குப் புரியிதில்ல.

    ReplyDelete
  2. Ready for Escape...

    Real Americans wanted to occupy CORRIDOORS of our land... While 2nd level Citizens of America are trying to get the Ruling power of our land at their best. BUT still they will be truthful to American's thirst of occupying our SriLnaka.

    Real and 100% Pure Citizens of This land will not allow Foreigners and Citizens of other nations to Rule this land by their votes.

    ReplyDelete

Powered by Blogger.