Header Ads



சஜித்தின் தோல்வி விளங்கிவிட்டது, நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோடாபயதான் - பஷீர்

சஜித் பிரேமதாஸவின் தோல்வி தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது. ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு அவரிடம் சென்று அவர்கள் பேசுவார்கள் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோடாபய ரஜபக்ஷவுக்கு ஆதரவான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முதலாவது பிரசார கூட்டம்  ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது.  

இதில் உரையாற்றும்போதே பஷீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வரவே முடியாது. ஏனென்றால் இந்த நாட்டில் அதிகமாக வாழ்பவர்கள்  சிங்களவர்கள் ஆவர். அவர்களின் அதிகப்படியான வாக்குகள் கோதாபய ராஜபக்ஷவுக்குத்தான் கிடைக்கும். அதே போல சிறுபான்மை மக்களின் ஒரு தொகை வாக்குகளும் அவருக்கு கிடைக்கும். பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை மக்களின் சிறுபான்மை வாக்குகளையும் பெறுபவரே ஜனாதிபதியாக வர முடியும் என்பதே இந்நாட்டு அரசியல் நிலவரம் ஆகும்.  

பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கவே மாட்டாது. மேலும் பிரேமதாசவுக்கு ரணில் கழுத்தறுப்பு செய்கின்றார். ஜே.வி. பியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்று கொடுத்த 05 இலட்சம் வாக்குகள் இம்முறை சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க போவதும் இல்லை.  

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க, அவற்றுக்கான தீர்வுகளை பெற்று தர கோட்டாபய ராஜபக்ஷ ஒருவரால் மாத்திரமே முடியும். ஏனென்றால் அவர் சொன்னால் சிங்கள பெரும்பான்மை சமூகம் செவிமடுக்கும். சிங்கள பௌத்த ஜனாதிபதியால்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்த முடியுமே தவிர பெரும்பான்மை சிங்கள மக்களால் நிராகரிக்கப்படுகின்ற ஒருவரால் அது முடியவே முடியாது.  

70 வருடங்களாக சமயோசிதமாக தமிழ் சமூகம் தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது. விடுதலை வேண்டி யுத்தம் செய்த சமூகமாகவும் அது இருக்கின்றது. தமிழ் தேசிய கட்சிகள் 13 அம்ச கோரிக்கைகளை கூட்டாக பிரதான வேட்பாளர்களுக்கு முன்வைத்தன. ஆயினும் பிரதான வேட்பாளர்கள் எவரும் அவை தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுக்கவிலை. அதுவே தமிழ் கட்சிகளின் தேவையாகவும் இருந்தது. ஒருவருடனும் பேச்சு வார்த்தை நடத்த கூடாது என்பதற்காகத்தான் இக்கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தும் இருந்தார்கள். ஆகவேதான் எவரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவைப்பாடு அவர்களுக்கு அற்று போய் விட்டது.  

அப்போதுதான் வெற்றி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் தேர்தலுக்கு பிற்பாடு அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மாத்திரம் அல்லாமல் சி. வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோருக்கும் சஜித்தின் தோல்வி விளங்கி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை கேட்டு இருக்கின்றார்.அதுவும் கோதாவுக்கு வாய்ப்பான விடயமே ஆகும். 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் தேர்தலை புறக்கணித்த நிலையிலே மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதை நான் நினைவூட்டுகின்றேன் என்றார். 

9 comments:

  1. இப்படியெல்லாம் பேசினால் இவருக்கு என்னென்ன கொடுப்பாரோ. வாலாட்டிகளில் ஒன்று.

    ReplyDelete
  2. Mr baseer athaulla hisbullah all are mahinda team members.

    ReplyDelete
  3. உன்னிடம் கெஞ்சி கேட்பது என்னவென்றால் சமூகத்துக்கு செய்யும் பெரிய பெரிய பெரிய உதவி யாதெனில் நீர் வாய் திறக்காதீர். நீர் கதைப்பதை கூட சகிக்க முடியவில்லை. அப்படியானால் எப்படி காது கொடுத்து கேட்பது . பிளீஸ் பாஸ் . வேண்டாம். நல்ல பிள்ளைதானே .

    ReplyDelete
  4. Very good decision to support Gotabaya

    ReplyDelete
  5. cheating fellow ,dont belive this including hazan ali uncle, hizbullah fox, myown mustapa mama

    ReplyDelete
  6. Mr.பஷீர் ஆசிரியராக,போராளியாக ,MP யாக Minister ராக வியாபாரியாக,எட்டப்பனாக, இப்படி தசாவதாரம் எடுத்தது நமக்குத் தெரியும் ஆனால் கடைசியாக தீர்க்கதரசி அவதாரம் எடுத்துள்ளார். அதன் மூலம் பிர்ஃவுனின் நிலைக்கு வந்து விட்டாரா? மறைவானவற்றை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே, இவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்??


    முஸ்லீங்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை அழித்தொழிக்கக் கூடியவர் கோட்டாவைத் தவிர யாருமில்லை என்ற ஒரு மாயயை உருவாக்கி பெரும்பான்மையினரின் மனதில் இடம் பிடிக்க சஹரானின் நடிப்பில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதில் வெற்றியும் கண்டவர்களிடம் தமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு கேட்கச் சொல்லுகிறார்.இவரது வளமான எதிர்காலத்திட்கு முஸ்லீங்களின் கழுத்தை கசாப்புக் கடைக்காரனிடம் நீட்டச் சொல்கிறார்.அரசியல் அனாதையானவர் மீண்டும் ஒரு முகவரி தேடிக் கொள்ள முஸ்லீங்களை பலிபீடம் ஏறச் சொல்கிறார்.



    ஐயா பஷீர் அவர்களே இந்நாட்டில் முஸ்லீங்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தப் பிரச்சனைகளையும் அல்லாஹ் வைக்கவில்லை இருக்கும் ஒரேஒரு பிரச்சனை உங்களைப் போன்ற சுயநல அரசியல்வாதிகள் தான். எதிர்கால முஸ்லீங்கள் இந்நாட்டில் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்று நீங்கள் உன்மையில் ஆசைப்பட்டால் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தற்கொலை செய்து கொள்ளுங்கள். நன்றி. .

    ReplyDelete
  7. அறிவழகன் : சரியான கருத்து
    இப்படியான பச்சோந்திகளுக்கு இனவாதிகளால் ஒன்றும் ஆகுதில்லையே என்று கவலையாக இருக்குறது - இந்த தேர்தலில் அதிகமான முஸ்லீம் பெயரில் திரியும் பச்சோந்திகளை காணக்கிடைத்தது - மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete
  8. இவர் எந்தப்பக்கம் சாய்கின்றாரோ அந்தப்பக்கத்திற்கு தோல்வி நிச்சயம்!

    ReplyDelete

Powered by Blogger.