முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கபட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தற்காலிகமான இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் அவருக்க வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு வந்தது.
பசில் ராஜபக்ஷ சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, பிரதிவாதி வைத்திய சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, டிசெம்பர் 5ஆம் திகதி முதல் மார்ச் 7ஆம் திகதிவரையான காலப்பகுதில் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றமம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், இந்த வழக்கு அடுத்த வருடம் மார்ச் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment